For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

30 லட்சம் கார்கள் விற்று ஹூன்டாய் சாதனை-கியாரண்டியும் அறிமுகம்

Google Oneindia Tamil News

Hyundai Acheives 3 Million Car
மும்பை: இந்தியாவின் இரண்டாவது பெரிய கார் தயாரிப்பாளர் ஹூன்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம். இது 30 லட்சம் கார்களை விற்று சாதனை படைத்துள்ளது. இவற்றில் ஏற்றுமதியும் அடக்கம்.

ஹூன்டாய் 1996-ம் ஆண்டு தனது செயல்பாட்டைத் தொடங்கியது. கடந்த 1998-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சான்ட்ரோ காரை முதன்முதலாக அறிமுகப்படுத்தியது. அடுத்த 17 மாத காலத்தில் தனது தொழிற்சாலையை அமைத்து 6 மாதத்திற்குள் இரண்டாவது பெரிய கார் தயாரிப்பாளரானது.

இதையடுத்து 25 மாதத்திற்குள் 1.5 லட்சம் கார்களைத் தயாரித்து சாதனை படைத்தது. மக்களின் நம்பிக்கைக்குரிய நிறவனமாகத் திகழ்கிறது ஹூன்டாய்.

இந்தியாவிற்குள் காலடி எடுத்து வைத்த 12 வருடத்திற்குள் 30 லட்சம் கார்களை விற்றுள்ளது இந்த நிறுவனத்தின் வரலாற்றில் ஒரு மைல்கல். இந்த சந்தோஷத்தைக் கொண்டாட ஹுன்டாய் மூன்று உத்தரவாத திட்டங்களை அறிமுகப்படுத்தவுள்ளது. பராமரிப்பு, மோட்டார், வாரன்டி உத்தரவாதங்கள் இதில் அடக்கம்.

மூன்று வருடத்திற்கு அல்லது 50,000 கிலோ மீட்டருக்கு பராமரிப்பு செலவிருக்காது என்று பராமரிப்பு உத்தரவாத திட்டம் உறுதி அளிக்கிறது.

மோட்டார் உத்தரவாத திட்டம் அதிகபட்சமாக 5 பேருக்கு ஒவ்வொருக்கும் அதிக அளவாக ரூ. 2,00,000 வரை இன்சுரன்ஸ் அளிக்கிறது.

வாரன்டி உத்தரவாத திட்டம் மூன்றாம் ஆண்டு அல்லது 60,000 கிலோ மீட்டர் வரை வாரன்டியை நீட்டித்துள்ளது. சாலையில் வண்டி சென்று கொண்டிருக்கும்போது ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் 2 வருடத்திற்கு இலவசமாக பழுது பார்க்கும் சலுகையும் உண்டு.

இந்த ஹுன்டாய் மூன்று உத்தரவாத திட்டம் சான்ட்ரோ மற்றும் ஐ 10 கார்கள் வாங்குபவர்களுக்கு மட்டும் தான். இந்தச் சலுகை ஆகஸ்ட் 5 முதல் 25 வரை உள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X