For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உடம்பில் 'ஹெட்' வேணும்னா 'ஹெல்மட்' போடணும்!

By Staff
Google Oneindia Tamil News

Helmet
ஹெல்மெட் இல்லாமல் பயணம் செய்வது எத்தகைய ஆபத்தானது என்பதை உணர்த்தும் குறும்படத்தை வெளியிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது சென்னை மாநகர போக்குவரத்து போலீஸ்.

பெங்களூருக்கு அடுத்து போக்குவரத்து நெரிசல் மிக்க நகரமாக சென்னை திகழ்கிறது. எப்போதும்முக்கிய சாலைகளில் ஊர்ந்துதான் செல்ல வேண்டியுள்ளது.

போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டிச் செல்வதே இதற்கு முக்கிய காரணமாகும். சென்னையில் நடக்கும் பெரும்பாலான விபத்துகளில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களே உயிரிழக்கிறார்கள்.

ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பறப்பதால், விபத்துக்குள்ளாகி விழுந்து தலையில் அடிபட்டு இறக்கிறார்கள் இளைஞர்கல்.

தலைக் கவசம் நம் உயிர் கவசம் என்பதை வலியுறுத்தும் வகையில் ஹெல்மெட் அணிவது அரசால் கட்டாயமாக்கப்பட்டது. ஆனால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களில் பெரும்பாலானோர் இதனைக் கண்டு கொள்வதில்லை. சிலர் ஹெல்மெட்டை மோட்டார் சைக்கிளில் தொங்கவிட்டப்படி பயணம் செய்வதைப் பார்கத்க முடிகிறது.

தடுத்து அபராதம் வசூலிக்கும் போலீசாரிடம் தங்கள் பின்னணி, பிரபலங்களின் பெயர்களைக் கூறி தப்பிப்போர் ஏராளம். போலீசாரும் ஒன்றும் சொல்ல முடியாமல் அவர்களை அனுப்புவதைப் பார்க்கலாம்.

ஆனால் ஹெல்மெட் போடாததால் விபத்துக்குள்ளாகி உயிரிழக்கும் நபர்களின் எண்ணிக்கையைப் பார்த்தால், இனி யாரும் ஹெல்மட் போடாமல் செல்ல மாட்டார்கள்.

கடந்த சில மாதங்களில் சென்னையில் மட்டும் 158 பேர் மோட்டார் சைக்கிள் விபத்தில் பலியாகியுள்ளனர். இவர் களில் 154 பேர் ஹெல்மெட் அணியாமல் சென்றதால் உயிர் இழந்துள்ளனர்.

இது தொடர்பாக கூடுதல் கமிஷனர் ரவி கூறுகையில், " ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு பிரசா ரங்களை தீவிரமாக செய்து வருகிறோம். துண்டு பிரசுரங்கள் வழங்குவதுடன் விழிப்புணர்வு பாடங்களையும் நடத்தி வருகிறோம்.

ஹெல்மெட்டின் அவசியத்தை உணர்த்தும் குறும்படம் ஒன்றையும், தயாரித்துள்ளோம். அதில் ஹெல்மெட் அணியாமல் செல்லும் ஒருவர் விபத்தில் சிக்கி தலையில் அடிபட்டு உயிரை இழக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. இதை பார்த்ததும் மேட்டார் சைக்கிளில் ஹெல்மெட்டை தொங்க விட்டு செல்லும் வாலிபர் அதனை தலையில் மாட்டிச் செல்வார்.

ஹெல்மெட் அணிந்தால் உங்கள் உயிருக்கு பாதுகாப்பு. உங்களின் பாதுகாப்பு உங்கள் குடும்பத்தின் பாதுகாப்பு. எனவே ஹெல்மெட் அணிய மறக்காதீர்கள் என்று நான் பேசுவது போல குறும்படம் முடிகிறது..." என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X