For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கரூர் வரும் விஜயகாந்த் 'மச்சான்' சுதீஷுக்கு காத்திருக்கும் சோதனை

By Chakra
Google Oneindia Tamil News

Sutheesh and Vijaykanth
கரூர்: கரூர் மாவட்ட தேமுதிக-வில் நிலவி வரும் கோஷ்டி பூசல் கரூருக்கு தேமுதிக மாநில இளைஞரணிச் செயலாளர் எல்.கே. சுதீஷ் வரும்போது பெரிதாக வெடிக்கும் என பரபரப்பாக பேசப்படுகிறது.

கரூரில் வரும் 10-ம் தேதி அன்று தேமுதிக பிரமுகர் சக்திவேல் திருமணத்தை நடத்தி வைக்கவும், சோமூர் ரவி என்பவர் வீ்டு கிரகப் பிரவேசத்திற்கும் சிறப்பு அழைப்பாளராக தேமுதிக இளைஞரணி மாநிலச் செயலாளரும், விஜயகாந்தின் மைத்துனருமான எல்.கே. சுதீ்ஷ் அழைக்கப்பட்டுள்ளார்.

ஆனால் கரூர் தேமுதிக மாவட்டச் செயலாளர் என்.எஸ்.கிருஷ்ணனை மாற்ற வேண்டும் என்று அக்கட்சி நிர்வாகிகள் சிலர் கடந்த சில மாதங்களாக போராடி வருகின்றனர்.

மேலும், தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழாவிலும், பேனர்களிலும் கரூர் மாவட்டச் செயலாளர் என்.எஸ். கிருஷ்ணனை புறக்கணித்தனர்.

இந்த நிலையில் கரூர் வரும் தேமுதிக இளைஞரணி மாநிலச் செயலாளரிடம் நியாயம் கேட்க தேமுதிக நிர்வாகிகள் தயாராகி வருவதாக கூறப்படுகின்றது. இரு தரப்பும் மோதிக் கொள்ளும் அபாயமும் உள்ளதாக கூறப்படுகின்றது.

இதனால் சுதீஷின் பயண விவரம் மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் சந்திப்பு நிகழும்போது 'சண்டை' நிச்சயம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X