• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

11 நாள் போராட்டப் பட்டியல்-வெளியிட்டது பிரிவினைவாத ஹூரியத் மாநாட்டுக் கட்சி

|

Geelani
ஸ்ரீநகர்: காஷ்மீரில் கலவரத்தை முன்னின்று நடத்தி வரும் பிரிவினைவாத கட்சியான சையத் அலி ஷா கிலானி தலைமையிலான ஹூரியத் மாநாட்டுக் கட்சி, 11 நாள் போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த 11 நாட்களிலும் பகலில் ஸ்டிரைக் செய்யுமாறும் இரவில் பணியாற்றுமாறும் கிலானி கேட்டுக் கொண்டுள்ளார்.

காஷ்மீரில் தற்போது நடந்து வரும் கலவரங்கள், வன்முறைச் சம்பவங்களை கிலானி தலைமையிலான ஹூரியத் மாநாட்டுக் கட்சியே முன்னின்று நடத்தி வருகிறது. இந்த நிலையில் போராட்டத்தைத் தீவிரப்படுத்தும் வகையில் 11 நாள் போராட்ட அறிவிப்பை கிலானி வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 11 நாட்கள் தொடர்ந்து ஸ்டிரைக் மேற்கொள்ளப்படவுள்ளது. அதன்படி ஸ்டிரைக் நாட்களில் தினசரி இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை மட்டுமே அனைத்து வர்த்தக நிறுவனங்கள், கடைகள், தொழிற்கூடங்கள் உள்ளிட்டவை செயல்பட வேண்டும். பகல் முழுவதும் நிறுவனங்களை மூடி ஸ்டிரைக்கில் ஈடுபட வேண்டும்.

செப்டம்பர் 19, 22 ஆகிய தேதிகளில் ஸ்டிரைக்குக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X