For Daily Alerts
Just In
இனி மொபைல் போன் மூலம் பங்கு விற்கலாம், வாங்கலாம்!

பெருகி வரும் தொழில் நுட்ப வசதிகளை அனைத்துத் துறையிலும் பயன்படுத்திக் கொள்ளும் முகமாக முதலீட்டாளர்களுக்கு இந்த வசதியைத் தருகிறது மும்பை பங்குச் சந்தை.
இதன் மூலம் இனி அனைவரும் எளிய முறையில் மொபைல் போன் மூலமாகவே பங்குசந்தை வர்த்தை தொடங்கலாம். தொடரலாம். முதற்கட்டமாக, தேர்ந்தெடுக்கப்பட்ட சில புரோக்கர்களுக்கு மட்டும் இந்த வாய்ப்பு தரப்பட்டுள்ளது. விரைவில் அனைவருக்கும் இது விரிவுபடுத்தப்படும் என்று செபி அறிவித்துள்ளது.
தேசிய பங்குச் சந்தையான நிப்டியும், அக்டோபர் மாதத்தில் மொபைல் போன் மூலமாக வர்த்தகத்தை துவக்க உள்ளது.