• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இங்கிலாந்து மன்னராட்சி தொன்மையான முட்டாள்தனம்: சல்மான் ருஷ்டி

Google Oneindia Tamil News
Rushdie with Padmalakshmi
லண்டன்: அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்ளும் இந்திய வம்சாவழி நாவலாசிரியர் சல்மான் ருஷ்டி இங்கிலாந்து அரசையும், அதன் பாரம்பரியத்தையும் நடைமுறைக்கு ஒவ்வாதது என்றும், முட்டாள்தனமானது என்றும் கூறி மறுடியும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

புக்கர் பரிசு வாங்கிய ருஷ்டி தி சன்டே டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

இங்கிலாந்து மன்னராட்சியும், அதன் பாரம்பரியமும் நடைமுறைக்கு ஒத்துவராதது, முட்டாள்தனமானது, விநோதமானது என்றார்.

அப்போது பேட்டி கண்டவர், நீங்கள் தற்போது இங்கிலாந்து பிரஜை. இங்கிலாந்து மன்னராட்சியை விமர்சிக்கும் நீங்கள், இங்கிலாந்து அரசு அளிக்கும் நைட்ஹூட் பட்டத்தை மட்டும் எதற்காக வாங்கிக் கொண்டீர்கள் என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த ருஷ்டி, பிரான்ஸ் அளித்த ஆர்டர் டெஸ் ஆர்ட்ஸ் எட் டெஸ் லெட்டர்ஸ் விருதை பெற்றுக் கொண்டபோது, என் நாடு அளிக்கும் கௌரவத்தை நிராகரிப்பது நன்றாக இருக்காது என்றார்.

தொடர்ந்து பேசிய 63 வயதான ருஷ்டி, நைட்ஹுட் விருது வழங்கும் விழாவே நகையாடும்படி தான் இருக்கிறது. அந்த விழா முட்டாள்தனமானது தான், இருந்தாலும் என்ன செய்ய முடியும் என்றார் ருஷ்டி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X