For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அயோத்தி வழக்கில் நிறைந்து கிடந்த 'கண்ணிவெடி'களை அகற்ற கடுமையாக போராடினோம்-நீதிபதி கான்

Google Oneindia Tamil News

Justices Sibghat Ullah Khan, Dharam Veer Sharma, Sudhir Agarwal of Lucknow HC Bench
லக்னோ: இது ஒரு சின்ன இடம்தான். ஆனால் தேவதைகள் வந்து போக அஞ்சும் அளவுக்கு 'கண்ணிவெடி'கள் (கடும் சவால்கள், பிரச்சினைகள்) நிறைந்து கிடக்கிறது. இதை சரிப்படுத்த கடுமையாக போராடினோம் என்று தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார் அயோத்தி தீர்ப்பை வழங்கிய மூன்று நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி சிப்கட் உல்லா கான்.

நீதிபதி கான் பிறப்பித்துள்ள தீர்ப்பில் கூறியுள்ள சில வார்த்தைகள்...

இது மிகச் சிறிய ஒரு இடம் (ராமர்ஜென்மபூமி-பாபர் மசூதி). ஆனால் இங்கு தேவதைகள் வரவே அச்சப்படும் அளவுக்கு 'கண்ணிவெடி'கள் நிறைந்து கிடக்கின்றன. அவற்றை எங்களால் முடிந்த அளவுக்கு அகற்றியுள்ளோம்.

இந்த முயற்சியில் ஈடுபட வேண்டாம், மிகவும் அபாயகரமானது என்று பலரும் எங்களை எச்சரித்தனர். இருந்தாலும் நாங்கள் ரிஸ்க் எடுத்துதான் ஆக வேண்டும். எடுத்துதான் ஆக வேண்டும் என்ற நிலைமை. அதைத்தான் நாங்கள் செய்தோம்.

சூழ்நிலை ரிஸ்க் எடுக்க வேண்டும் என்ற நிலைக்கு நம்மைத் தள்ளும்போது அதைச் செய்யத் துணியாமல் இருப்பதுதான் மிகப் பெரிய ரிஸ்க் என்று கூறுவார்கள். எனவேதான் நாங்கள் ரிஸ்க் எடுத்து இந்த 'கண்ணிவெடி'களை அகற்றியுள்ளோம் என்று கூறியுள்ளார் கான்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X