• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாளை மலேசியாவுடன் மோதல்-காமன்வெல்த்தில் முதல் பதக்கத்திற்கான தேடுதல் தொடக்கம்

|

Indian Hockey team
டெல்லி: காமன்வெல்த் போட்டியில் முதல் பதக்கத்தை வெல்லும் தேடுதல் வேட்டையை இந்திய ஆடவர் ஹாக்கி அணி நாளை தொடங்குகிறது. முதல் போட்டியில் மலேசியாவை எதிர்கொள்கிறது.

காமன்வெல்த் போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி இதுவரை பதக்கம் வென்றதில்லை. தற்போது டெல்லியில் நடைபெறும் காமன்வெல்த் போட்டியில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க இந்தியா தீவிரமாக உள்ளது.

இந்திய அணி நாளை தனது முதல் போட்டியில் மலேசியாவை சந்திக்கிறது. இதில் இந்தியாவுக்கே வெற்றி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு பலமாக உள்ளது.

இந்திய அணி ஏ பிரிவில் உள்ளது. இப்பிரிவின் ஆட்டம் நாளை தியான் சந்த் தேசிய ஹாக்கி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

1998ம் ஆண்டு கோலாலம்பூரில் நடந்த காமன்வெல்த் விளையாட்டின்போதுதான் முதன் முதலாக ஹாக்கி சேர்க்கப்பட்டது. அப்போட்டித் தொடரில் இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்தது.

அதன் பின்னர் 2002 மான்செஸ்டர் போட்டியில் இந்திய அணி பங்கேற்கவில்லை. கடந்த முறை 2006ல் ஆஸ்திரேலியாவில் நடந்த தொடரில் இந்தியா 6வது இடத்தையே பிடிக்க முடிந்தது.

ஆனால் இந்த முறை பதக்கம் வெல்லாமல் விடுவதில்லை என்ற வைராக்கியத்தில் உள்ளது எட்டுமுறை ஒலிம்பிக் சாம்பியனான இந்தியா.

ராஜ்பால் சிங் தலைமையிலான இந்திய அணியினர், பதக்கத்தை வென்று விடும் தீவிரத்துடன் தங்களது முதல் போட்டியில் மலேசியாவை நாளை சந்திக்கின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X