For Quick Alerts
For Daily Alerts
மீண்டும் 20000 புள்ளிகளுக்கு கீழே போன சென்செக்ஸ்!

திங்கள்கிழமை வர்த்தகத்தில் 150 புள்ளிகள் எடுத்த எடுப்பில் சரிய, மீண்டும் 20000 புள்ளிகளுக்கும் கீழே சரிந்தது.
ஏற்கெனவே கடந்த வாரத்தின் கடைசி இரு நாள்களில் சென்செக்ஸ் கடும் சரிவைச் சந்தித்தது. இந்த இரு தினங்களில் மட்டும் 561 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.
காலை 11 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 19974 புள்ளிகளுடன் இருந்தது.
தேசிய பங்குச் சந்தை நிப்டியில், 47 புள்ளிகள் சரிந்து 6,014.80 புள்ளிகளுடன் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
ஆசியாவின் இதர சந்தைகளான ஹாங்காங்கில் 0.80 சதவீத உயர்வும், ஜப்பானின் நிக்கியில் 0.21 சதவீத வீழ்ச்சியும் காணப்பட்டது.