For Daily Alerts
Just In
உணவுப் பணவீக்கம் 15.53% ஆக குறைந்தது
டெல்லி: உணவுப் பணவீக்கம் 0.84 சதவீதம் குறைந்து 15.53 ஆக இறங்கியுள்ளது.
உருளைக்கிழங்கு உள்ளிட்ட சில காய்கறிகளின் விலை குறைந்ததாலும், சப்ளை அதிகரித்துள்ளதாலும், நாட்டின் உணவுப் பணவீக்கம் அக்டோபர் 9ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 15.53 சதவீதமாக குறைந்தது.
அதற்கு முந்தைய வாரத்தில் அது 16.37 சதவீதமாக இருந்தது. தற்போது 0.84 சதவீதம் குறைந்துள்ளது.
வருடாந்திர அடிப்படையில், உருளைக்கிழங்கின் விலை 50 சதவீதம் குறைந்துள்ளது. வெங்காயத்தின் விலை 8.62 சதவீதமாக குறைந்துள்ளது. அதேசமயம், பருப்பு வகைகள், பால் மற்றும் பழங்களின் விலை தொடர்ந்து உயர்விலேயே உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Comments
Story first published: Thursday, October 21, 2010, 13:56 [IST]