For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தனி பயணமாக பாகிஸ்தானுக்கும் போகிறார் பராக் ஒபாமா

Google Oneindia Tamil News

Obama
வாஷிங்டன்: இந்தியா வரும் அமெரிக்க அதிபர்கள் வழக்கமாக பாகிஸ்தானுக்கும் ஒரு எட்டு போய் விட்டு வருவார்கள். ஆனால் முதல் முறையாக இரு நாடுகளுக்கும் தனித் தனி பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் அதிபர் ஒபாமா.

அடுத்த மாதம் இந்தியா வருகிறார் ஒபாமா. அவருடன் மனைவி மிஷலும் வருகிறார். பிள்ளைகளுக்கு லீவு கிடைக்காததால், இரு மகள்களும், ஒபாமா தம்பதியுடன் வரவில்லை.

இதேபோல அடுத்த வருடம் பாகிஸ்தானுக்கும் போகிறார் ஒபாமா. தற்போது அமெரிக்கா வந்துள்ள பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி பர்வேஸ் அஷ்பாக் கயானி, ஒபாமாவைச் சந்தித்தார். அப்போது ஒபாமாவின் பாகிஸ்தான் பயணம் குறித்தும் பேசப்பட்டது.

மேலும், இந்த சந்திப்பின்போது ஒபாமாவின் ஆசிய பயணத்தின்போது பாகிஸ்தானுக்கு அவர் போக மாட்டார். மாறாக அடுத்த ஆண்டு பாகிஸ்தானுக்குச் செல்ல ஒபாமா ஆர்வமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அடுத்த ஆண்டு பாகிஸ்தான் அதிபர் சர்தாரி அமெரிக்கா வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X