For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுக-காங்கிரஸ் கூட்டணியை கருவறுப்போம்- தமிழர் களம் அரிமாவளவன் சபதம்

Google Oneindia Tamil News

கரூர்: வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் தோற்கடிப்பதே தங்களது லட்சியம் என தமிழர்களம் அமைப்பின் பொதுச் செயலாளர் அரிமாவளவன் கூறியுள்ளார்.

1956ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி மொழிவாரியாக சென்னை மாகாணம் பிரிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகம் உருவான தினத்தை தமிழர் களம் கொண்டாடியது. கரூரில் நடந்த இந்த நிகழ்ச்சியில், எம்.ஜி.ஆர். சிலையில் இருந்து பேரணி முக்கிய சாலை வழியாக 80 அடி சாலையை அடைந்தது. அங்கு தமிழர் களம் கலைக்குழு சார்பில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனையடுத்து, பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழர் களம் பொதுச் செயலாளர் அரிமாவளவன் பேசுகையில்,

ஈழத்தில் தமிழர்களை படு கொலை செய்த போது, பெண்ணுரிமை அமைப்புகள் எங்கே போனது. தலித் அமைப்புகள் எங்கே சென்றது. கிறிஸ்துவ அமைப்புகள் எங்கே சென்றது. தமிழன் தனித்துவிடப்பட்டான். அந்த நிலைமை மாறும். அற்காக தமிழர்களம் பாடுபடும். வரும் தேர்தலில் தமிழர்களுக்கு எதிரானவர்கள் தோற்பது உறுதி. அதற்கு இப்போதே நாங்கள் களம் அமைத்துவிட்டோம் என்றார்.

இந்த பொதுக் கூட்டத்தில், எழுகதிர் ஆசிரியர் அரு. கோபாலன், எழுச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், திரைப்பட இயக்குனர் புகழேந்தி தங்கராசு, தன்மானத் தமிழ் மறவர் கூட்டமைப்பைத் சேர்ந்த புலவர் பாவிசைக்கோ, தனித்தமிழர் சேனை தலைவர் நகைமுகன், மள்ளர் மீட்புக் களம் செந்தில் மள்ளர், மறத் தமிழர் சேனை புதுமலர் பிரபாகரன், தமிழ் தேசிய கட்சி பொன்னிறைவன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X