For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும் கடவுளுக்கு எங்கள் மீது நம்பிக்கை உள்ளது-கருணாநிதி

Google Oneindia Tamil News

Karunanidhi
மதுரை: பேரன், பேத்திகள், சின்ன பேரன்கள், குட்டி பேத்திகளை காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது என்றால் இங்கே பேசியவர்கள் குறிப்பிட்டதை போல கடவுள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை என்றாலும் கடவுளுக்கு எங்கள் மீது நம்பிக்கை இருப்பதுதான் என்று கூறினார் முதல்வர் கருணாநிதி.

மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் தயாநிதியின் திருமண விழா அரசியல் விழாவாக மாறியது. மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி முதல் தமிழகத்தின் சிறு கட்சிகளின் தலைவர்கள் வரை பல்வேறு அரசியல் பிரமுகர்களும் இதில் கலந்து கொண்டு திருமணத்தை பிரமாண்டமாக்கினர்.

மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி-அனுஷ்கா திருமணத்தை முதல்வர் கருணாநிதி இன்று நடத்தி வைத்தார்.

திருமணத்திற்குப் பின்னர் முதல்வர் பேசுகையில்,

கூட்டணியை வலுப்படுத்தும் விழா:

இது திருமண விழா என்றாலும் அரசியல் எண்ணங்களை வெளிப்படுத்தும் விழாவாக அமைந்துள்ளது. மேலும், திமுக, காங்கிரஸ் கூட்டணியை வலுப்படுத்தும் விழா.

காங்கிரசும், திமுகவும் நாட்டின் நலனுக்காக எவ்வாறு பாடுபடுகிறதோ அதேபோன்று மணமக்கள் வாழ்க்கை கூட்டணியை வெற்றிகரமாகத் தொடர வேண்டும்.

இந்த விழாவில் கூட்டணியின் முக்கியத் தலைவர்களில் இருவரான மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டுள்ளனர். இது நமது கூட்டணியின் வலுவைக் காட்டுகிறது.

அருமை நண்பர் ரஜினி இங்கே குறிப்பிட்டது போல எனக்கு ஏராளமான பேரப்பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்கள் சுய மரியாதை இயக்கத்தின் வீரபிள்ளைகளாகவும் இருக்கிறார்கள்.

ஒரு குடும்பத்தில் தந்தை - தாய் சுயமரியாதை இயக்கத்தில் இருந்து அவர்களது வழிதோன்றல்களான மகன், பேரன், பேத்திகள் அந்த கொள்கைகளுக்கு விரோதமாக சென்றால் அந்த குடும்பத்தின் நோக்கமே பட்டுப்போய் விடும்.

கடவுளுக்கு எங்கள் மீது நம்பிக்கை உள்ளது:

பேரன், பேத்திகள், சின்ன பேரன்கள், குட்டி பேத்திகளை காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது என்றால் இங்கே பேசியவர்கள் குறிப்பிட்டதை போல கடவுள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை என்றாலும் கடவுளுக்கு எங்கள் மீது நம்பிக்கை இருப்பதுதான்.

என்னுடைய பரம்பரையில், என்னுடைய வாழ்க்கையில் நான் பெற்றுள்ள இன்பமோ, துன்பமோ தந்தை பெரியாரின் வழியில் அண்ணாவின் அறிவுரைகள் எனக்கு பக்க பலமாக உள்ளது. இங்கே இருப்பவர்கள் அழகிரியோ, ஸ்டாலினோ மட்டுமின்றி என் உயிரினும் மேலான கழக உடன்பிறப்புளாகிய பட்டாளங்கள், சேனைகள் நீங்கள்தான்.

ஏன் உங்கள் பிள்ளைகளுக்கு முத்து, அழகிரி, ஸ்டாலின் என்று பெயர் வைத்துள்ளீர்கள் என எல்லோரும் கேட்டபோது, நான் அவர்களிடம் சொன்னது எனது தந்தை முத்துவேலர் பெயரில் முத்து என்ற பெயரையும், சுய மரியாதை இயக்க தலைவர் அழகிரிசாமி பெயரில் அழகிரி பெயரையும், ரஷ்ய பொது உடமை கட்சி தலைவர் ஸ்டாலின் மறைந்தபோது எனது மகன் பிறந்ததால் ஸ்டாலின் பெயரையும் வைத்தேன்.

மேலும் தமிழரசன், செல்வி, கனிமொழி என்ற பெயர் வைப்பதற்கு நான் தமிழ் மொழி மீது கொண்ட பற்றும் பாசமும் தான் காரணம்.

எனக்கு அழகிரி கரும்பு:

மு.க.அழகிரியை மதுரை வட்டாரத்தில் அஞ்சா நெஞ்சன் என்று கூறி வந்தனர். தற்போது தமிழகம் முழுவதும் கூறி வருகிறார்கள். அழகிரி என்றதுமே சிலருக்கு புன்னகை, சிலருக்கு ஆத்திரம், சிலருக்கு வெறுப்பு ஏற்படுகிறது.

ஆனால் இந்த மூன்றும் கலந்தவர்தான் அழகிரி. என்னை பொறுத்தவரை அழகிரியை கரும்பு என்பேன். கரும்பை அடியில் சுவைத்தால் தித்திக்கும், இனிக்கும். மேலும் மேலும் சுவைத்துக் கொண்டே வந்தால் தித்திக்காது. இனிக்காது, துவர்க்கும். அதுபோல அழகிரியை இந்த வட்டார திமுகவினர் கரும்பாக கருதி எந்த அளவிற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டுமோ, அந்த அளவிற்கு பயன்படுத்த வேண்டும்.

கருணாநிதியின் மகன், பேரன் என்று நினைத்து கரும்பை மேலும் மேலும் சுவைக்க நினைத்தால் நுனி கரும்பு கரிக்கும். நாக்கை கிழிக்கும்.

அஞ்சா நெஞ்சன் என்று அவரை பலரும் அழைப்பதற்கு, சுயமரியாதை இயக்கத்தின் தலைவராக இருந்த பட்டுக்கோட்டை அழகிரியின் பெயர்தான் அவருக்கு வைக்க காரணமாக அமைந்தது. அவரைப் போலவே நிமிர்ந்த நடையும், நேர்மை கொண்ட பார்வையும் இருக்க வேண்டும் என்ற ஆசை தான் அனைவருக்கும் எழுகிறது என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X