For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வில்லியம் தான் அடுத்த மன்னராக வேண்டும், சார்லஸ் வேண்டாம்: கருத்துக் கணிப்பு

Google Oneindia Tamil News

William with Kate Middleton
லண்டன்: இளவரசர் வில்லியம்தான் அடுத்த மன்னராக முடி சூடப்பட வேண்டும் என்று இங்கிலாந்து மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சார்லஸ் மன்னராகக் கூடாது என்று அவர்கள் உரத்த குரலில் கருத்துக் கணிப்பு ஒன்றில் தெரிவித்துள்னர்.

அதேபோல வில்லியமின் மனைவியாக கேட் மிடில்டன் வரவுள்ளதையும் இங்கிலாந்து மக்கள் பெருமளவில் வரவேற்றுள்ளனர்.

இங்கிலாந்தின் நியூஸ் ஆப் தி வேர்ல்டு செய்தித்தாள் நடத்திய ஐசிஎம் கணக்கெடுப்பில் 64 சதவிகித மக்கள் வில்லியமும், அவரது வருங்கால மனைவியும் தான் அரியணை ஏற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.

சன்டே டைம்ஸ் நடத்திய யூகவ் கணக்கெடுப்பில் பெரும்பாலானோர் தந்தை சார்லஸை விட மகன் வில்லியம் சிறந்த அரசராக இருக்கக் கூடும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தற்போது ராணியாக இருக்கும் எலிசபெத்தை (84) அடுத்து மகுடம் சூட்டப்பட வேண்டியவர் சார்லஸ் (62) தான். ஆனால் மக்களிடையே அதற்கு ஆதரவு இல்லை. இருப்பினும், யார் அடுத்த மன்னராக வர வேண்டும் என்று மக்களால் நிர்ணயிக்க முடியாது.

ஐடிஎம் கணக்கெடுப்பில் 5-ல் ஒருவர் தான் சார்லஸ், கெமிலாவுக்கு ஆதரவாக உள்ளனர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

யூகவ் கணக்கெடுப்பில் 44 சதவிகித மக்கள் சார்லஸ் தாமாக தனது மகனுக்கு வழி விட வேண்டும் என்றும், 37 சதவீதம் பேர் அவர் அவ்வாறு விலகிவிடக் கூடாது என்றும் கூறியுள்ளனர்.

வில்லியமும் (28), கேட் மிடில்டனும் (28) இந்த வாரம் தான் தங்கள் நிச்சயதார்த்தத்தைப் பற்றி அறிவித்தனர்.

சிலர் சார்லஸுக்கு வயதாகிவிட்டதால் அவரால் சிறப்பாக செயலாற்ற முடியாது என்று கருதுகின்றனர். அவர் மனைவி கெமிலாவால் டயானாவின் புகழுக்கு அருகில் கூட வரமுடியவில்லை.

சார்லஸ் தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் கெமிலா ராணியாகக்கூடும் என்று கூறிய மறுநாளே இந்த கணக்கெடுப்புகள் நடந்தன.

சார்லஸ் தனது நெடுநாள் காதலியான கெமிலாவை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். சிஎன்என் நடத்திய கணக்கெடுப்பில் கலந்து கொண்டவர்கள் வில்லியம் திருமணம் நடப்பது நல்லது என்றனர்.

பெரும்பாலான மக்கள் வில்லியம் திருமணத்தை வரவேற்றாலும், நாடு இருக்கும் நிலையில் பிரமாண்ட திருமணம் பொருளாதாரப் பிரச்சனையை மேலும் அதிகரிக்கும் என்று கருதுகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X