For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாரா பாலின் பற்றி கவலையில்லை: ஒபாமா

Google Oneindia Tamil News

Sarah Obama
நியூயார்க்: தான் வேலையில் கவனம் செலுத்துவதாகவும், வரும் அதிபர் தேர்தலில் முன்னாள் அலாஸ்கா ஆளுநர் சாரா பாலினை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி யோசிக்கவில்லை என்றும் அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

அன்மையில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த சாரா பாலின் 2012ம் ஆண்டு நடக்கவிருக்கும் தேர்தலில் அதிபர் ஒபாமாவை தோற்கடிப்பேன் என்று கூறியிருந்தார்.

இது குறித்து ஒபாமா கூறுகையில், நான் சாரா பாலினை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி இப்போது கவலைப்படவில்லை. அவருக்கு குடியரசுக் கட்சியில் நல்ல ஆதரவு உள்ளது. அவரின் திறமைகளை நான் மதிக்கிறேன்.

ஆனால் தற்போது நான் எப்படி சிறந்த அதிபராக இருக்க முடியும் என்பது பற்றித் தான் எனது நேரத்தை செலவிடுகிறேன். நான் அதிபராக பதவி ஏற்றதிலிருந்து எனது வேலையை நான் ஒழுங்காக செய்தால் போதும் என்று நினைத்து செயல்பட்டு வருகிறேன் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X