For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காஷ்மீரை தனி நாடாக அறிவிக்க வேண்டும்-காங் அமைச்சர் பேச்சு

Google Oneindia Tamil News

ஜம்மு: காஷ்மீரை சுதந்திர நாடாக அறிவிக்க வேண்டும் என்று பிரிவினைவாத அமைப்பினர் போராடி வரும் நிலையில் அவர்களுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார் அம் மாநில காங்கிரஸ் அமைச்சரான ஷாம்லால் சர்மா.

மாநில சுகாதாரம் மற்றும் தோட்டக்கலைத்துறை அமைச்சரான ஷாம்லால் சர்மா, காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் பேசுகையி்ல்,

காஷ்மீரை தனி நாடாக அறிவிக்க வேண்டும். அதே நேரத்தில் ஜம்முவை தனி மாநிலமாகவும் லடாக் பகுதியை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும். இதை செய்வது தான் காஷ்மீருக்கும் மக்களுக்கும் நல்லது என்றார்.

இவரது பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரை அமைச்சரவையிலிருந்து நீ்க்குவதோடு, கைது செய்ய வேண்டும் என்று பாஜக கோரியுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், ஷாம்லாலின் பேச்சு அவரது தனிப்பட்ட கருத்து. காஷ்மீருக்கு இந்திய அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு தன்னாட்சி அதிகாரம் வழங்குவதே காங்கிரஸ் கொள்கை என்றார்.

English summary
The statement of a senior state Congress leader supporting freedom for Kashmir and separate Statehood for Jammu and Union territory status for Ladakh has triggered a fresh controvery. JK Minister for Health and horticulture Sham Lal Sharma raised the issue of the state’s trifurcation and calling for making Jammu a separate state while seeking freedom for Kashmir. BJP is demanding for his removal from cabinet and arrest.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X