For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லியூ ஜியாபோவிற்கு நோபல் பரிசு வழங்கும் விழா-இந்தியா பங்கேற்பு-இலங்கை உள்பட 19 நாடுகள் புறக்கணிப்பு

By Chakra
Google Oneindia Tamil News

Liu Xiaobo
டெல்லி: நாளை சீன அதிருப்தித் தலைவர் லியூ ஜியாபோவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. ஆஸ்லோவில் நடக்கும் இந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்வதென்று இந்தியா முடிவு செய்துள்ளது.

54 வயதாகும் லியூ, சீன அரசுக்கு எதிராக பகிரங்கமாக எதிர்ப்புக் குரல் எழுப்பி வரும் முக்கியப் பிரமுகர் ஆவார். தற்போது 11 ஆண்டு சிறைவாசத்தில் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கும் விழாவை புறக்கணிக்குமாறு இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு சீனா வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த விழாவில் கலந்து கொள்வதாக உறுதி அளித்துள்ள 49 நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

அதேசமயம் சீனாவின் கண்டிப்பு கலந்த கோரிக்கையை ஏற்று பாகிஸ்தான், ரஷ்யா, கஜகஸ்தான், கொலம்பியா, இலங்கை, டுனிஷியா, சவுதி அரேபியா, செர்பியா, ஈராக், ஈரான், வியட்நாம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 19 நாடுகள் பல்வேறு காரணங்களை காட்டி விழாவை புறக்கணிக்கின்றன.

English summary
Chinese dissident Liu Xiaobo will be awarded Nobel Peace Prize tomorrow in a grand ceremony in Oslo. In the mean while China has asked several nations including India to avoid this function. India has now decided to attend the Nobel function. 49 countries including India have accepted the invitaion. 19 countries including Pakistan, Afghanistan, Russia, Iraq, Iran, Vietnam, Serbia, Saudi Arabia, Columbia have turned down it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X