For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேர்தல் நேரத்து கருத்துக் கணிப்புகளைத் தடை செய்ய வேண்டும்-தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி

Google Oneindia Tamil News

போபால்: தேர்தல் நேரத்தில் வெளியாகும் கருத்துக் கணிப்புகளை தடை செய்ய வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி கூறியுள்ளார்.

போபாலில் நடந்த தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொண்டு அவர் பேசுகையில்,

தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெற கருத்துக் கணிப்புகள் இடையூறாக உள்ளன. பணம் கொடுத்து செய்தி வெளியிடும் விவகாரம் குறித்து பல்வேறு புகார்கள் எழுவதால் தேர்தல் கருத்துக் கணிப்புக்கு தடை விதிக்கலாம் என்பதே எனது கருத்து.

வாக்குப் பதிவு நாளில், முன்னணி நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடுவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும்.

தேர்தல் முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு சில சமயங்களில் | 500 மட்டுமே அபராதம் விதிக்கப்படுகிறது. இது போன்ற குற்றங்களில் தண்டனையை கடுமையாக்க வேண்டும்.

தேர்தலின்போது வாக்காளர்களுக்குப் பணம் விநியோகிக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் வருகின்றன. இது குறித்து தேர்தல் ஆணையம் ஆராய்ந்து வருகிறது.

பல்வேறு இடங்களில் பதிவான வாக்குகளை கலந்து ஒரே இடத்தில் வாக்குகளை எண்ண திட்டமிட்டுள்ளோம். இதன்மூலம் குறிப்பிட்ட பகுதியில் ஒரு வாக்காளருக்கு எவ்வளவு வாக்குகள் கிடைத்துள்ளன என்ற ரகசியத்தைக் காப்பாற்ற முடியும் என்றார்.

English summary
CEC Qureshi wants to ban poll time opinion polls. He urged the govt to bring a move in this regard. In his opinion, all these opinion polls are biased and money backed. So better we can ban these opinion polls during poll time, he added.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X