For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சனி கிரக நிலவில் பனிக்கட்டி எரிமலை: நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

Google Oneindia Tamil News

சான் பிரான்சிஸ்கோ: சனி கிரகத்தின் நிலவான டைடனில் பனிக்கட்டி எரிமலை இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் சனி கிரகத்திற்கு காசினி என்னும் செயற்கைகோளை அனுப்பியது. இதற்கு காசினி மிஷன் என்று பெயரிடப்பட்டுள்ளது.

அந்த செயற்கைகோள் சனி கிரகத்தின் அமைப்புகளை புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது. அவ்வாறு காசினி அனுப்பிய புகைப்படத்தில் சனி கிரகத்தின் நிலவான டைடனில் 1, 500 மீட்டர் உயர பனிக்கட்டி எரிமலை இருப்பது தெரிய வந்துள்ளது.

டைடன் நிலவின் வெளிப்புறம் ஐஸ் கட்டியினால் ஆன தண்ணீர் மற்றும் அம்மோனியாவால் ஆனது. அது மிகக் குறைந்த வெப்பநிலையிலேயே உருகும் தன்மை உடையது. அவ்வாறு உருகி டைடனின் வெளிப்புறத்தில் படர்ந்து நிற்கிறது.

டைடனில் உள்ள மலைகளின் இடையே எரிமலையும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது டைடனின் தெற்கு பகுதியில் உள்ளது.

மேலும், இது அங்குள்ள கடலில் மணற்குன்றுகளாக உள்ளன. இவற்றை சொட்ராபாகுவா என்று அழைக்கின்றனர். டைடன் நிலவு பனிக் கட்டியால் சூழப்பட்டிருப்பதால் இந்த எரிமலையையும் பனிக்கட்டி மூடியுள்ளது. இவை காசினி செயற்கை கோளின் “3டி" காமிரா மூலம் படம் பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை புவியியல் விஞ்ஞானிகள் மாநாட்டில் பேராசிரியர் டாக்டர் கிர்க் தெரிவித்தார்.

English summary
Cassini satellite shows that Saturn"s moon Titan has evidence of ice volcanoes in it. Cassini satellite is sent by NASA which sends pictures of Saturn. Scientists have found out the ice volcano in Saturn through the 3d pictures of Cassini.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X