For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹைதி காலரா பலி எண்ணிக்கை 2, 400ஐ தாண்டியது : சுகாதார அமைச்சகம் அறிவிப்பு

Google Oneindia Tamil News

போர்ட்-ஔ-பிரின்ஸ்: ஹைதி நாட்டில் இது வரை காலராவுக்கு 2, 400 பேர் பலியாகியிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹைதியில் கடந்த அக்டோபர் மாத நடுவில் காலரா வேகமாக பரவ ஆரம்பித்தது. இதற்கு நேற்று வரை 2, 405 பேர் பலியாகியுள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. காலராவால் பாதிக்கப்பட்ட 109,196 பேரில் 54,500க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை பலி எண்ணிக்கை 2, 193 ஆக இருந்தது. நாள் ஒன்றுக்கு 27, 26 பேர் உயிர் இழக்கின்றனர். ஏற்கனவே பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஹைதிக்கு காலரா பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் தான் காலரா பாதிப்பு குறைந்து வருவதாக மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் மகிழ்ச்சி நிலைக்கவில்லை.

English summary
Quake hit Haiti is now in the grip of cholera. Cholera infection which began in mid october has claimed 2, 405 lives till now. Nearly 26, 27 people die everyday of cholera.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X