For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜா பெயரை எச்.எல். கோகலே குறிப்பிடவே இல்லை-கே.ஜி.பாலகிருஷ்ணன் திட்டவட்டம்

Google Oneindia Tamil News

KG Balakrishnan and Raja
டெல்லி: சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே எனக்கு அனுப்பிய அறிக்கையில், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா பெயர் இடம்பெறவே இல்லை என்று மீண்டும் அடித்துக் கூறியுள்ளார் முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன்.

இதுகுறித்து அவர்கூறுகையில், எனக்கு கோகலே அனுப்பி வைத்த கடிதத்தை நான் முழுமையாக படித்துப் பார்த்தேன். அதில் எந்த இடத்திலும் ராஜாவின் பெயர் இடம்பெறவில்லை.

கோகலே எழுதிய கடிதத்தை இப்போது நான் வெளியிடுகிறேன். அதில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரகுபதியை மிரட்டியதற்காக ராஜாவை விசாரிக்க வேண்டும் என்றோ, வேறு எந்த வகையிலுமோ நீதிபதி கோகலே குறிப்பிடவில்லை.

கோகலே கூறியபடி அவர் அனுப்பி வைத்த கடிதத்தில் கூட 2வது பத்தியில், ஒரு அமைச்சர் என்றுதான் கூறப்பட்டுள்ளது. மாறாக ராஜா என்று கூறப்படவில்லை. நீதித்துறைக்குள்ளேயே புகைச்சலைக் கிளப்பவே இந்த விவகாரம் தற்போது சர்ச்சையாக கிளப்பப்பட்டுள்ளது என்று கூறினார் கே.ஜி.பாலகிருஷ்ணன்.

English summary
Former chief justice of India K G Balakrishnan has refuted allegations against him that he did not act against former telecom minister A Raja for trying to influence judiciary. Balakrishnan said he had gone by the letter of the chief justice of the Madras High Court , which did not mention any Union minister’s name. Releasing the letter written by Justice H L Gokhale in 2009, who is now a Supreme Court judge, Balakrishnan said it did not hold enough grounds to prosecute Raja for allegedly trying to influence Madras HC judge Justice Raghupathi into giving bail to two of his friends through an advocate. In para two of the letter, there was reference to a minister but the name was not in the forwarding letter, Balakrishnan said. The controversy was just an attempt to create a wedge between the high institutions of judiciary, he noted.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X