For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கல்மாடியை ஒலிம்பிக் சங்கத் தலைவர் பதவிக்கு பரிந்துரைத்தவர் பாஜகவின் மல்ஹோத்ரா

Google Oneindia Tamil News

டெல்லி: பாஜக மூத்த தலைவரான வி.கே.மல்ஹோத்ரா தான் சுரேஷ் கல்மாடியை இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பதவிக்கு பரிந்துரைத்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் தேர்வு நடந்தது. அப்போது பாஜக மூத்த தலைவர் வி. கே. மல்ஹோத்ரா கல்மாடி பெயரை பரிந்துரை செய்துள்ளார். அவர் காமன்வெல்த் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக கல்மாடி சிறப்பாக செயல்பட்டதாகப் பாராட்டியும் உள்ளார்.

இந்திய வில்வித்தை சங்கத்தின் தலைவராக இருக்கும் மல்ஹோத்ரா கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ம் தேதி நடந்த கூட்டத்தில் ஒலிம்பிக் கூட்டமைப்புக் குழு உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் அதிகாரத்தையும் கல்மாடியிடமே ஒப்படைக்குமாறும் பரிந்துரைத்துள்ளார். இது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எஸ். சி. அகர்வால் என்பவர் தாக்கல் மனுவின் பதில் மூலம் தெரிய வந்துள்ளது.

மல்ஹோத்ரா கல்மாடியை பரிந்துரைக்க பதிலுக்கு கல்மாடி மல்ஹோத்ரைவை கூட்டமைப்புக் குழு துணைத் தலைவர் பதவிக்கு பரிந்துரை செய்துள்ளார். ஒருவரையொருவர் மாறி மாறி பரிந்துரைத்து, இறுதியில் இருவரும் போட்டியின்றி தத்தம் பதவிகளைப் பெற்றனர்.

கல்மாடி சிறப்பாக காமன்வெல்த் போட்டிகளை ஒருங்கிணைத்ததாக மல்ஹோத்ரா புகழாரம் சூட்டினார். ஆனால் 2010-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் ஊழல் உலகம் அறிந்த செய்தி. இந்த ஊழல் குறி்த்து சிபிஐ 3 வழக்குகள் தொடர்ந்துள்ளது. மேலும், ஊழல் அதிகாரிகள் மூன்று பேரையும் கைது செய்துள்ளது.

காமன்வெல்த் ஊழலால் உலக அரங்கில் இந்தியாவிற்கு அவப்பெயர் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது ஒரும்புறம் இருக்க கல்மாடியை மீண்டும் ஒலிம்பிக் கூட்டமைப்புக் குழு தலைவர் பதவிக்கு பரிந்துரை செய்துள்ளார் மல்ஹோத்ரா.

அந்த கூட்டத்தில் துணை தலைவர்கள் எண்ணிக்கையை 12ல் இருந்து 16 ஆகவும், இணைச் செயலாளர்கள் எண்ணிக்கையை 6ல் இருந்து 8 ஆக உயர்த்தவும் வலியுறுத்தியுள்ளார். அதே கூட்டத்தில் கல்மாடி ரந்திர் சிங் மற்றும் ஏ. கே. மட்டூ ஆகியோரை செயலாளர் ஜெனரலாகவும், பொருளாளராகவும் தேர்வு செய்ய பரிந்துரை செய்துள்ளார். அவர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். பதவிகளைப் பெறுவதில் தான் அவர்களுக்குள் எத்தனை ஒற்றுமை.

மேலும், பாஜக தலைவர் பெய்ஜிங் ஒலிம்பிக்கில் இந்தியா சிறப்பாக விளையாடியதற்கு கல்மாடி தான் காரணம் என்று பாராட்டு மழை பொழிந்துள்ளார். இந்தியா பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் ஒரு தங்கம், 2 வெண்கலப் பதக்கங்களை வென்றது.

கல்மாடிக்கு எதிராக பாஜக குய்யோ முறையோ என்று எம்பிக் குதித்து அமளி செய்தது நினைவிருக்கலாம். ஆனால் அவர்களது கட்சியின் மூத்த தலைவர கல்மாடியைப் பரிந்துரைத்ததோடு மட்டுமல்லாமல் அவரை வாய் கிழிய பாராட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

English summary
Senior BJP and current president of Archery Association of India had proposed Kalmadi as IOC chief in the meeting held on october 10, 2008. In turn Kalmadi proposed Malhotra as senior VP of the sports body. Malhotra not only proposed Kalmadi but also praised him for his efforts in CWG and Beijing olympics. This information came to limelight through Right to Information act.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X