For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தயாளு அம்மாளுக்கு தயாநிதி ரூ.600 கோடி தந்தாரா?: சோ நிரூபிக்கத் தயாரா?-கருணாநிதி சவால்

Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: "அமைச்சர் பதவிக்காக தயாளு அம்மாளுக்கு, தயாநிதி மாறன் ரூ.600 கோடி கொடுத்ததாகச் சொல்வதை நிரூபிக்கத் தயாரா'' என்று பத்திரிகையாளர் சோவுக்கு முதல்வர் கருணாநிதி சவால் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:

கேள்வி: "மத்திய அமைச்சர் பதவியைப் பெறுவதற்காக தயாளு அம்மாளுக்கு தயாநிதி மாறன் 600 கோடி ரூபாய் கொடுத்ததாக - நீரா ராடியா டேப் உரையாடல் செய்தி கூறுகிறதே?'' என்ற ஒரு கேள்விக்கு "துக்ளக்'' இதழில் பதில் எழுதும் போது "இது பற்றி, இன்னமும் எந்தவிதமான உறுதியான மறுப்பும் வெளிவந்ததாகத் தெரியவில்லை. மத்திய அரசில், மந்திரிகள் நியமனம் ஆகிற முறை பற்றியும், அதில் தி.மு.க. பெற்றுள்ள "பங்கு'' பற்றியும் தெளிவாக விளக்குகிற விஷயம் இது'' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதே?.

பதில்: பதினைந்து நாட்களுக்கு முன்பு ஒரு சில நாளேடுகளில் இது போன்றதொரு செய்தி வந்த போது, அதைப் பார்த்த நான் இப்படிப்பட்ட பைத்தியக்காரர்களும் நாட்டிலே இருக்கிறார்களே என்று தான் எண்ணிக்கொண்டேனே தவிர, அதைக் கூடவா நம்புபவர்கள் இருப்பார்கள், எனவே அந்தச் செய்தியை மறுக்க வேண்டு மென்று தோன்றவில்லை.

நிரூபிக்க தயாரா?

ஆனால் இன்று அந்தச் செய்தி "துக்ளக்'' இதழிலும் வெளி வந்து பதில் சொல்லப்பட்டிருப்பதைக் காணும் போது - ஒரே பொய்யைத் திரும்பத் திரும்ப இவ்வாறு எழுதினால் அது நம்புவதற்குரிய ஒன்றாக ஆகி விடுமோ என்ற நப்பாசையில் தொடர்ந்து அதை எழுதி வருவதால் அந்தச் செய்தியை மறுத்திட விரும்புகிறேன்.

அமைச்சர் பதவிக்காக தன் பேரனிடம் அதுவும் 600 கோடி ரூபாய் அவரின் பாட்டியார் வாங்கினார் என்று உண்மையிலேயே ஒரு காலத்தில் எனக்கு நண்பராக இருந்த சோ நம்புகிறாரா? தயாநிதிமாறனுக்கு அல்ல, வேறு யாருக்காகவாவது அமைச்சர் பதவியை வழங்குவதற்காக தி.மு.க பணம் பெற்றதாக சோ நிரூபிக்கத் தயாராக இருக்கிறாரா? ஏனென்றால் துக்ளக் பதிலில் மந்திரிகள் நியமனம் ஆகிற முறை பற்றியும், அதில் தி.மு.க. பெற்றுள்ள பங்கு பற்றியும் தெளிவாக விளக்குகிற விஷயம் இது என்றும் சொல்லியிருப்பதால், இதனை நான் தெளிவாக்க விரும்புகிறேன்.

சதித் திட்டம்

இதுபோன்ற உண்மைக்கு மாறான பொய்ச் செய்திகளை திட்டமிட்டு சோ போன்ற ஒரு சில பத்திரிகையாளர்கள் திரித்து வெளியிட்டோ அல்லது அதற்காக கூடிப்பேசி சதித்திட்டம் வகுத்தோ திராவிட இயக்கத்தை சேதப்படுத்த எண்ணுகிறார்களா?.

உண்மையிலேயே தயாநிதிமாறன் அமைச்சர் பதவிக்காக 600 கோடி ரூபாய் பணம் கொடுத்ததாக துக்ளக் சோவோ அல்லது அந்தச் செய்தியை வெளியிட்ட பத்திரிகையாளர்களோ நிரூபிக்கத் தயாராக இருக்கிறார்களா?. அப்படியிருந்தால் அந்தச் செய்தியை உறுதிப்படுத்தி அவர்கள் இதழிலே அதனை அவர்கள் பெயரிலேயே வெளியிடட்டும். அவர்களை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயாராக இருக்கிறோம். சோ ராமசாமி, இதற்குப் பதில் சொல்வாரா?.

இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

English summary
Chief Minister M Karuinnadhi challenged Journalist Cho Ramaswamy to prove his allegation on Dayalu Ammal who received Rs 600 cr to get a berth for Dayanidhi Maaran in UPA cabinet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X