For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஞ்சிபுரம் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை பாதி வழியில் போட்டுவிட்டு கொள்ளையர்கள் ஓட்டம்

Google Oneindia Tamil News

ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் அருகே ஏடிஎம் எந்திரந்தை கடத்திச் சென்ற கொள்ளையர்கள் ஆம்புலன்ஸ் சத்தத்தை போலீஸ் சைரன் என்று நினைத்து பாதி வழியில் போட்டுவிட்டுத் தப்பியோடிவிட்டனர். இதனால் ரூ. 27 லட்சம் பணம் தப்பியது.

சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருங்காட்டுகோட்டை சிப்காட்டில் ஸ்டேட் பேங்க் ஏ.டி.எம். உள்ளது. இதில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் காவலாளியாக பணி புரிந்தார்.

அதிகாலை 2 மணி முகமூடி அணிந்த 4 பேர் அஙகு வந்தனர். காவலாளியை அடித்து அவரது கை, கால்களை கட்டி சுற்றுச் சுவர் ஓரமாகப் போட்டுவிட்டு ஏடிஎம் எயந்திரத்தை பெயர்த்து தூக்கிக் கொண்டு சென்று வேனில் ஏற்ற முயன்றனர். அப்போது தூரத்தில் ஆம்புலன்ஸ் வரவே கொள்லையர்கள் போலீஸ் தான் சைரன் ஒலி எழுப்பி வருகிறார்கள் என்று நினைத்து எந்திரத்தை போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர்.

பின்னர் காவலாளி கிருஷ்ணன் கட்டை அவிழ்த்துக் கொண்டு ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். டி.ஐ.ஜி. ராமசுப்பிரமணியம், போலீஸ் சூப்பிரண்டு பிரேம் ஆனந்த்சின்கா, துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரந்து வந்து எந்திரத்தை மீண்டும் பழைய இடத்திலேயே வைத்தனர்.

அந்த எந்திரத்தில் ரூ. 27 லட்சம் பணம் இருந்தது. கொள்ளையர்கள் வழியிலேயே போட்டுவிட்டு ஓடியதால் பணம் தப்பியது. போலீசார் கொள்ளையர்களை வலை வீசித் தேடி வருகின்றனர்.

English summary
There is a state bank ATM in Chennai, Bangalore highway. 4 unidentified persons attacked the security guard and took away the ATM machine. When they were about to keep it in the van, an ambulance came that way. The thieves mistook ambulance siren for police patrol vehicle"s siren . They ran away leaving the machine which had Rs. 27 lakh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X