செஞ்சுரியன் டெஸ்ட்-தென் ஆப்பிரிக்கா 1 இன்னிங்ஸ், 25 ரன் வித்தியாசத்தில் வெற்றி

Posted By:
Subscribe to Oneindia Tamil

செஞ்சுரியன்: இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி ஒரு இன்னிங்ஸ், 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் மூன்று டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது தென் ஆப்பிரிக்கா.

செஞ்சுரியன் பார்க்கில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடந்தது. மிகவும் விறுவிறுப்பாக இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் சொதப்பியது இந்தியா. வெறும் 136 ரன்களை மட்டுமே அது எடுத்தது. அதேசமயம், தென் ஆப்பிரிக்க அணி 620 ரன்களைக் குவித்து டிக்ளேர் செய்தது.

இதையடுத்து 2வது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியா சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. கம்பீர் 80, ஷேவாக் 63, டோணி 90 ரன்களைக் குவித்தனர். டிராவிட் தன் பங்குக்கு 43 ரன்கள் எடுத்தார்.

ஆனால் ஆட்டத்தின் முக்கிய அம்சமாக சச்சின் டெண்டுல்கரின் 111 ரன்கள் அமைந்தது. டெஸ்ட் வரலாற்றில் 50வது சதத்தைப் போட்டார் சச்சின். மேலும் அணியை பெரும் இக்கட்டிலிருந்து சற்று பரவாயில்லை என்றநிலைக்குக் கொண்டு சென்றார். அப்படியே இன்னிங்ஸ் தோல்வியையும் சச்சின் தவிர்க்க உதவலாம் என்ற நம்பிக்கை இருந்தது.

ஆனால் அந்த எண்ணம் வீண் போனது. இன்றைய கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்தியா படு வேகமாக சரிந்து ஆல் அவுட் ஆனது. சச்சின் மட்டும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 111 ரன்களுடன் களத்தில்இருந்தார்.

போட்டி முழு விபரம்

இந்தியா அனைத்து விக்கெட்களையும் இழந்து 459 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஒரு இன்னிங்ஸ், 25 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியைத் தழுவியது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
India lose the Centurion thriller by an innings and 25 runs. India scored 136 runs in its first inninigs. South African pacers brought Indians to their kneel. Later SA slammed 620 for 8 wkts in their 1st innings. India however in its second innings punished the SA"s bowlers. Sachin smashed his 50th ton. Gambhir took 80, Dhoni piled 90 and Sehwag scored 63. There was a little hope in Sachin who was unbeaten till the end, to rescue India, but it failed. India lost its 2nd innings for 459. South Africa now leading the test series by 1-0.
Please Wait while comments are loading...