For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுவாமி அசிமானந்த்துக்கு சம்ஜாதா ரயில் தாக்குதலிலும் தொடர்பு-என்ஐஏ

Google Oneindia Tamil News

பன்ச்குலா: ஹைதராபாத்தின் மெக்கா வசூதியில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடைய சாமியார் அசிமானந்த்துக்கு, 68 பேரைர் பலிகொண்ட சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்புச் சம்பவத்திலும் தொடர்பு உள்ளதாக தேசிய புலனாய்வு ஏஜென்சியின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மெக்கா மசூதியில் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது அங்கு குண்டுவெடித்தது. இதில் 9 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் இந்து தீவிரவாதிகள் ஈடுபட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது.

இந்த நிலையில் நவம்பர் 19ம் தேதி 59 வயதாகும் அசிமானந்த்தை ஹரித்வாரில் வைத்து சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் மெக்கா மசூதி குண்டுவெடிப்பில் தனக்குள்ள தொடர்பை அவர் ஒத்துக் கொண்டார். மேலும் சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பில் உள்ள தொடர்பையும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார் என்று தேசிய புலனாய்வு ஏஜென்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் சம்ஜாதா குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்து வரும் சிறப்பு கோர்ட்டான பன்ச்குலா கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், சாமியாருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் எங்களுக்கு உள்ளது. அவரிடம் நடத்திய விசாரணையில் சம்ஜாதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தனக்கு உள்ள தொடர்பையும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து ஜனவரி 3ம் தேதி வரை தொடர்ந்து காவலில் வைத்து விசாரிக்க தேசிய புலனாய்வு ஏஜென்சிக்கு கோர்ட் அனுமதி அளித்தது.

2007ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி நள்ளிரவில் இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் சென்று கொண்டிருந்த சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரயிலில் இரண்டு பெட்டிகளில் குண்டுகள் வெடித்தன. இதில் 68 பேர் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பாகிஸ்தானியர்கள். இவர்களில் 38 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டனர். லாகூருக்கு சென்று கொண்டிருந்தவர்கள் இவர்கள்.

மொத்தம் 6 பெட்டிகளில் குண்டுகள் வைக்கப்பட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது. இந்த குண்டுகள் லாகூரில் வாங்கப்பட்டிருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. ஆனால் வழக்கில் புதிய திருப்பமாக இந்து சாமியாருக்கு இதில் உள்ள தொடர்பு தற்போது அம்பலமாகியுள்ளது.

English summary
The National Investigation Agency (NIA) has claimed that Hyderabad"s Mecca Masjid blast accused, Swami Asimanand was also involved in the February 2007 Samjhauta train blasts that killed 68 people, mostly Pakistanis. Sources said that NIA, in its application submitted to the additional district and sessions court (a special court for Samjhauta blasts case), stated that it had sufficient evidence against the Swami. The Central Bureau of Investigation (CBI) had arrested 59-year-old Swami on November 19 from Haridwar in connection with the blast at the historic Mecca Masjid in Hyderabad on May 18, 2007.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X