For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குண்டர் தடுப்புச் சட்டத்தில் 3 பேரை அடைக்கும் போலீஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு-அரசு அறிவிப்பு

Google Oneindia Tamil News

நெல்லை: குற்றவாளிகள் 3 பேரை குண்டர் சட்டத்தில் அடைக்கும் போலீஸ் அதிகாரிகள் சர்வீஸ் புக்கில் அது பதிவு செய்யப்படும், அவர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்க இது வகை செய்யும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறிப்பிட்ட ஒரு காவல் நிலையத்தில் அதிகாரியாக இருப்பவர் மூன்று பேரை குண்டர் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து அந்த வழக்கை சென்னையில் உள்ள அட்வைஸசரி கமிட்டி உறுப்பினர்கள் அங்கீகரிக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரியின் சர்விஸ் புக்கில் இனி சிறப்பு பதிவு செய்யப்படும்.

மெரிட்டோரியல் சர்விஸ் என்ட்ரி என்ற இந்த பதிவு சம்பந்தப்பட்ட போலீசாருக்கு எதிர்காலத்தில் பதவி உயர்வு பெறவும் உதவும். இதே போன்று கொலை வழக்கு, குற்ற நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டு, அது தொடர்பான வழக்கில் குற்றவாளிக்கு ஏழு ஆண்டோ அல்லது அதற்கு மேல் ஆயுள்தண்டனை பெற்று தரும் விசாரணை அதிகாரிக்கும் இந்த எம்எஸ்சி என்ட்ரி கொடுக்கப்படுகிறது.

குண்டாஸ் மற்றும் அதிகபட்ச தண்டனைகள் பெற்றுத்தரும் போலீஸ் அதிகாரிகள் குறித்த தகவல்களை சம்பந்தப்பட்ட மாவட்ட காவல்துறை மூலம் அனுப்பி வைத்தால் சர்விஸ் புக் என்ட்ரி செய்யப்படும். இதற்கான பணிகள் விரைவில் துவங்கும்.

இந்த சலுகையை காவல்துறையினர் முறையாக பயன்படுத்த வேண்டுமே என்ற கவலையும் கூடவே எழுகிறது. பதவி உயர்வுக்கு ஆசைப்பட்டு சரமாரியாக குண்டர் தடுப்புச் சட்டத்தை காவல்துறையினர் பயன்படுத்தி விடாமல் கண்காணிக்கவும் ஒரு ஏற்பாட்டை அரசு செய்தால் நல்லது.

English summary
Policeman who arrests atleast 3 under goonda act will get promotion. Those who get maximum punishment for the culprits also will be promoted.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X