For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சீனாவுக்கு ஏர்டெல் போட்ட 'புது ரூட்டு'!

Google Oneindia Tamil News

Airtel Logo
சென்னை: இந்தியா- சீனா இடையே தரைவழியாக புதிய நேரடி தொலைத் தொடர்பு கேபிளை அமைத்துள்ளது பார்தி ஏர்டெல் நிறுவனம்.

இதன் மூலம் சீனாவுடன் தங்கு தடையற்ற தொலைத் தொடர்பை இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்தித் தந்துள்ளது ஏர்டெல்.

தற்போது கடல்வழியாகத்தான் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தரைவழியான தொடர்பு இதுவே முதல் முறை. தூரமும் மிகக் குறைவுதான். இதன் மூலம் 40 ஜிபிபிஎஸ் வேகத்தில் தகவல் தொடர்பை பரிமாறிக் கொள்ளப்படும்.

சீனா டெலிகாம் கார்ப்பரேஷனுடன் இணைந்து இந்த தொடர்பை ஏற்படுத்தியுள்ளது ஏர்டெல். இந்தியாவில் சிலிகுரி, நாதுலா கணவாய் வழியாக சென்று பெடாங் மூலம் சீனாவுக்குள் நுழைகிறது இந்த தொலைத் தொடர்பு ரூட்.

இரண்டாவது ரூட் சீனாவிலிருந்து நாதுலா வழியாக காங்டாக் வந்து இந்தியாவின் சிலிகுரியை அடையும்.

இதுகுறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏர்டெல் மற்றும் சீனா டெலிகாம் கார்ப்பரேஷன் இடையே சமீபத்தில் கையெழுத்தானது.

English summary
Bharti Airtel, in association with China Telecom Corporation, on Thursday announced the commencement of a direct underground link between India and China-the two fastest growing economies in the world. The new 40Gbps terrestrial link, built on highly resilient ring infrastructure will offer unparalleled diversity and reach to the region.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X