• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நித்தியானந்தாவை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து கூறிய ரஞ்சிதா, ஜூஹி சாவ்லா, மாளவிகா

|

Nithyanantha and Juhi Chawla
பெங்களூர்: சாமியார் நித்தியானந்தாவை அவரது ஆசிரமத்தில் சந்தித்து தனித் தனியாக சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டனர் நடிகைகள் ஜூஹி சாவ்லா, ரஞ்சிதா, டிவி நடிகை மாளவிகா ஆகியோர்.

நித்தியானந்தாவுடன் அந்தரங்க கோலத்தில் இருந்த காட்சி வெளியானதைத் தொடர்ந்து தலைமறைவான ரஞ்சிதா இப்போது மீண்டும் வெளியுலகத்திற்குத் திரும்பி விட்டார். நித்தியானந்தாவுடன் இணைந்து அவர் தீவிரமாக செயல்படுவார் என்பதை அவரது செயல்கள் வெளிக்காட்ட ஆரம்பித்துள்ளன.

வந்த வேகத்தில் லெனின் கருப்பன் தன்னைக் கற்பழிக்க முயற்சித்தார் என்று ரஞ்சிதா புதிய புகாரைக் கிளப்பியுள்ளார். இந்த நிலையில் நித்தியானந்தாவின் 34வது பிறந்த நாளையொட்டி பிதாதியில் உள்ள அவரது ஆசிரமத்தில் ஆனந்த்தோச்வா என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ரஞ்சிதா கலந்து கொண்டார். ரஞ்சிதா மட்டுமல்லாமல் பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லா, கர்நாடகத்தைச் சேர்ந்த டிவி நடிகை மாளவிகா ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த மூன்று நடிகைகளும் சனிக்கிழமை நித்தியானந்தா ஆசிரமத்திற்குச் சென்று அவரைத் தனித் தனியாக சந்தித்தனர். அவரிடம் தங்களது சொந்தப் பிரச்சினைகள் குறித்து மூவரும் பேசியதாக கூறப்படுகிறது.

மேலம் ஆனந்தோத்சவா நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டு இந்த நிகழ்ச்சியில் பெரும் திரளானோர் கலந்து கொண்டிருந்தனர். ஆனால் நேற்றைய நிகழ்ச்சியில் மிகக் குறைவானரே வந்திருந்தனர்.

திசை திருப்ப முயற்சிக்கும் நித்தியானந்தா-போலீஸ்

இதற்கிடையே தன்னை லெனின் கருப்பன் கற்பழிக்க முயற்சித்தார் என்று நடிகை ரஞ்சிதா கூறுவதும், வீடியோவில் இருப்பது நானோ, சாமியாரோ அல்ல என்றும் ரஞ்சிதா கூறியிருப்பது திசை திருப்பும் செயல் என்று கர்நாடக சிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வீடியோவில் இருப்பது ரஞ்சிதா, நித்தியானந்தா என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதில் இருப்பது அவர்கள்தான் என்பதும் தடயவியல் சோதனை மூலம் நிரூபனமாகியுள்ளது. இதை மறுக்க முடியாது. இதை கோர்ட்டிலும் தெரிவித்துள்ளோம்.

மேலும், ரஞ்சிதா தன்னை லெனின் கருப்பன் கற்பழிக்க முயன்றதாக இப்போது திடீரென சொல்வது நம்பும்படியாக இல்லை. வழக்கை திசை திருப்ப நித்தியானந்தாதான் இப்படி ரஞ்சிதாவை பின்னாலிருந்து இயக்குவதாக கருதுகிறோம். வழக்கை திசை திருப்பி, அனைவரையும் குழப்பி, அதில் ஆதாயம் காணும் முயற்சியாகவே இதைக் கருதுகிறோம் என்றனர்.

அதேசமயம், ரஞ்சிதா செய்தியாளர்களிடம் பேசியதற்கும், நித்தியானந்தா கைதான பிறகு போலீஸாரிடம் கொடுத்த வாக்குமூலத்திற்கும் முற்றிலும் நேர்மாறாக உள்ளது.

2010ம் ஆண்டு மே மே மாதம் கர்நாடக சிஐடி போலீஸாரிடம் நித்தியானந்தா அளித்த வாக்குமூலம் வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதில் பலமுறை தான் ரஞ்சிதாவுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொ்ண்டதாக நித்தியானந்தா கூறியதாக தெரிகிறது. மேலு், ஒரு வருடத்திற்கும் மேலாக தனது ஆசிரமத்தில் ரஞ்சிதா தங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார் நித்தியானந்தா. அத்தோடு இல்லாமல், 14க்கும் மேற்பட்ட பெண்களுடன் தனக்கு உடல் ரீதியான உறவு இருந்ததாகவும் ஒப்புக் கொண்டுள்ளார் நித்தியானந்தா. ஆனால் இதற்கு நேர் மாறாக பேசியுள்ளார் ரஞ்சிதா. எனவேதான் வழக்கை திசை திருப்ப ரஞ்சிதா மூலமாக நித்தியானந்தா முயல்வதாக கர்நாடக சிஐடி போலீஸார் கூறியுள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Actresses Juhi Chawla, Malavika and Ranjitha visited Nithyananda’s ashram Dhyanapeetham in Bidadi to wish Nithyananda on his 34th birthday on Saturday. They also took part in Anandotsava programme, held as part of the birthday celebrations. They met Nithyananda separately and discussed personal issues, sources said.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more