For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாமக எம்எல்ஏ வீட்டில் மோதல்-விசாரிக்க வந்த சப் -இன்ஸ்பெக்டருக்கு உதை

Google Oneindia Tamil News

பண்ருட்டி : பாமக எம்எல்ஏ வீட்டில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு அடி உதை விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பாமகவைச் சேர்ந்த வேல்முருகன். இவர் சென்னை வளசரவாக்கம் பகுதியில் ஒரு பங்களா கட்டி வருகிறார்.

இந்த வீட்டைக் கட்ட மூன்று பேர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதில் கட்டிம் கட்ட கூலி நிர்ணயம் செய்வதில் ஒப்பந்தக்காரர்களிடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அது மோதலாக மாறி இறுதியில் கைகலப்பாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வளசரவாக்கம் காவல்நிலைய சப் - இன்ஸ்பெக்டர் மகாதேவன் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளார். அப்போது அங்கிருந்த சிலர் சப் -இன்ஸ்பெக்டர் மகாதேவனை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதையடுத்து தன்னை தாக்கியவர்கள் மீது உரிய நவடிக்கை எடுத்து கைது செய்யுமாறு சப் - இன்ஸ்பெக்டர் மகாதேவன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகராரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
PMK MLA Velmurugan is constructing a bungalow in Valasaravakkam, Chennai. The contractors fought among themselves about money. When the SI Mahadevan came to solve the problem, he was attacked by them. Mahadevan filed a complaint to arrest the attackers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X