For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தோஹாவில் புதிய கிளை திறக்கும் ஸ்டேட் வங்கி!

Google Oneindia Tamil News

துபாய்: கத்தார் தலைநகர் தோஹாவில் இந்த ஆண்டு தனது முதல் கிளையை திறக்க திட்டமிட்டுள்ளது பாரத ஸ்டேட் வங்கி. 2011-ம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்தக் கிளை திறக்கப்பட உள்ளது.

மார்ச் 2011- முதல் இந்த கிளை செயல்படத் துவங்கும் என வங்கியின் சிஇஓ சத்யஜித் பட்டேல் தெரிவித்தார்.

இந்த கிளை திறப்புக்கான அனுமதியை கத்தார் நிதி ஒழுங்காற்று மையத்திடம் கோரியுள்ளது எஸ்பீஐ.

சர்வதேச அளவில் வங்கியை விஸ்தரிக்கும் எஸ்பீஐயின் திட்டத்தில் கத்தார் கிளை திறப்பு முக்கிய அம்சமாகப் பார்க்கப்படுகிறது.

அடுத்து ஜெத்தாவிலும் புதிய எஸ்பீஐ கிளை திறக்கப்படுகிறது.

எஸ்பீஐக்கு தற்போது வெளிநாடுகளில் மட்டும் 152 கிளைகள் உள்ளன. இந்த எண்ணிக்கையை அடுத்த இரு ஆண்டுகளில் 1000 ஆக உயர்த்த முடிவு செய்துள்ளது வங்கி.

English summary
State Bank of India (SBI) has decided to set up a branch in Doha during the first quarter of 2011, according to a senior bank official. The SBI, which has 152 branches overseas, aims to increase the number of foreign offices to over 1,000 in the next couple of years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X