For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2010ல் 6 லட்சம் கார் விற்ற ஹூன்டாய் : கார் விற்பனையில் புதிய சாதனை

Google Oneindia Tamil News

Hyundai
மும்பை: கடந்த ஆண்டில் மட்டும் 6 லட்சம் கார்கள் விற்று ஹுன்டாய் மோட்டார் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது.

இது குறித்து ஹுன்டாய் நிறுவனத்தின் சிஇஓ கூறியதாவது,

இந்த சாதனை மூலம் கம்பெனியின் தயாரிப்புகளுக்கு மக்கள் மத்தியில் உள்ள வரவேற்பு தெரிகிறது. மக்கள் எங்கள் தயாரிப்பு மீது நம்பிக்கை வைத்து வாங்குகின்றனர். இது போன்ற சாதனை வரும் ஆண்டுகளிலும் தொடரும் என்று எதிர்பார்க்கிறோம். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகள் கொடுக்கிறோம் என்றார்.

சான்ட்ரோ முதல் சான்டா எப்ஈ சொகுசு எஸ்யுவி வரை விற்பனை சக்கை போடு போட்டிருக்கிறது. கார் சந்தையில் ஹுன்டாய் 20 சதவிகிதம் பங்கு வைத்துள்ளது. உள்ளூர் சந்தைக்கேற்ப 7 மாடல் கார்கள் 47 மாறுபட்ட வகைகளில் கிடைக்கின்றன.

ஹுன்டாய் கார்கள் 120 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதில் ஐ10 ஏற்றுமதி பிராதனமானது. கடந்த 1996-ம் ஆண்டு இந்திய கார் சந்தையில் ஹுன்டாய் காலடி எடுத்து வைத்தது. பின்னர் 2 ஆண்டுகள் கழித்து சான்ட்ரோ காரை அறிமுகப்படுத்தியது.

கடந்த நவம்பரில் உள்ளூர் சந்தையில் மட்டும் 20 மில்லியன் கார்கள் விற்று சாதனை படைத்தது. அது தான் தற்போது நிகழ்ந்துள்ள புதிய சாதனைக்கு வழி வகுத்தது.

English summary
It's festive season for Hyundai Motor India. It has created a new record by selling 6 lakh cars in the last calendar year. The company's CEO cum MD said that this is possible because of the customers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X