For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகம் முழுவதும் காய்கறி மொத்த வியாபாரிகளின் வீடு-கடைகளில் அதிரடி சோதனை!

By Chakra
Google Oneindia Tamil News

Market
சென்னை: கறுப்புப் பண பதுக்கலையே மிஞ்சிவிட்டது வெங்காய பதுக்கல் சமாச்சாரம். தமிழகம் முழுவதும் காய்கறி வியாபாரிகள் வீடு மற்றும் கடைகளை அதிரடியாக சோதனையிட்டு வெங்காயம் பதுக்கப்பட்டுள்ளதா என ஆராய்ந்தனர் வருமான வரித்துறையினர்.

தொடர்ந்து இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூடுதல் இயக்குனர் எஸ்.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விலை அசாதாரணமாக உயர்ந்துள்ளது. இதில், வியாபாரிகள் ஏராளமாக லாபம் அடைந்து வருவதாக வருமானவரித் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையொட்டி, ஒரே நேரத்தில் பல இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனை தொடர்பாக மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் - -பிஐபி- வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

"காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளதால், காய்கறி வியாபாரிகள் பெருமளவு லாபம் ஈட்டி வருவதாக வந்த தகவலை அடுத்து வருமானவரித்துறை சென்னை, பொள்ளாச்சி, திருச்சி, திண்டுக்கல், மதுரை ஆகிய இடங்களில் வருமானவரி சோதனைகளை நடத்தியது.

10 பெரிய காய்கறி வர்த்தகர்களிடம் சோதனை நடத்தப்பட்டதோடு, அவர்களிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணையையும் மேற்கொண்டனர். குறிப்பாக, அண்மையில் காய்கறி விலை உயர்ந்தபின் அவர்களுக்கு கிடைத்த லாபம், அவர்கள் போட்ட முதலீடு பற்றி கேள்விகள் கேட்கப்பட்டன.

இவர்களிடம் வருமானவரி சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக சென்னை வருமான வரித்துறையின் கூடுதல் இயக்குனர் எஸ்.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்..."

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

விலை குறையுமா?

சென்னையில் கோயம்பேட்டை தலைமையிடமாகக் கொண்டு மொத்த வியாபாரம் செய்யும் 6 காய்கறி வியாபாரிகளிடமும், மதுரை, திருச்சி, திண்டுக்கல், பொள்ளாச்சி ஆகிய இடங்களில் தலா ஒரு வியாபாரியிடமும் தீவிரமாக சோதனை நடந்தது.

அவர்களிடம் பல கேள்விகளை கொடுத்து, அதற்கு அதிகாரிகள் பதில் கேட்டனர். எங்கெங்கு இருந்து காய்கறிகள் வாங்குகிறீர்கள்? எவ்வளவு ரூபாய்க்கு நீங்கள் வாங்குகிறீர்கள்? எவ்வளவு ரூபாய்க்கு சில்லரை வியாபாரிகளுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் விற்கிறீர்கள்? எல்லா செலவும் போக, உங்களுக்கு லாபம் எவ்வளவு வரும்? என்பதுபோன்ற பல கேள்விகளை அதிகாரிகள் கேட்டனர்.

திண்டுக்கல்லில் 400-க்கும் மேற்பட்ட வெங்காய கமிஷன் மார்க்கெட்டுகள் இருக்கிறது. இங்கு சின்ன வெங்காயம், பெல்லாரி வெங்காயம் ஆகியவை விவசாயிகளிடம் கொள்முதல் செய்து வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவையில்லாமல் முதல் தர வெங்காயம் தனியாக பிரிக்கப்பட்டு இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மதுரையில் இருந்து வருமான வரித்துறையைச் சேர்ந்த 5 அதிகாரிகள் திண்டுக்கல்-தாடிக்கொம்பு ரோட்டில் உள்ள ஒரு வெங்காய கமிஷன் கடையில் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனை காலை 9 மணிக்கு தொடங்கி மாலை வரை நடந்தது.

இதுகுறித்து வியாபாரி ஒருவரிடம் கேட்ட போது, சோதனை செய்யப்பட்ட வெங்காய கமிஷன் கடையில் இருந்து ஆந்திராவிற்கு வெங்காயம் விற்பனை செய்துள்ளனர். சமீபத்தில் ஆந்திராவில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட போது அங்கு கைப்பற்றப்பட்ட ஆவணங்களை கொண்டு திண்டுக்கல்லில் சோதனை செய்ததாக கூறப்படுகிறது என்று தெரிவித்தார்.

மதுரையில்...

மதுரையை அடுத்த பரவையில் உள்ள மொத்த காய்கறி வியாபாரி ஒருவரின் வீட்டுக்கு நேற்று காலை வருமானவரி அதிகாரிகள் சென்றனர். அங்கு தீவிர சோதனை நடத்தி, அங்கு இருந்தவர்களிடம் விசாரித்தனர். சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட விற்பனை விவரம், லாபம் பற்றிய தகவல்களை சேகரித்து விட்டுச் சென்றனர்.

கோவையில்...

கோவை மாவட்டத்தில் கோவை, பொள்ளாச்சி மற்றும் மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் உள்ள 5 காய்கறி மொத்த வியாபாரிகளின் கடைகள் மற்றும் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வியாபாரிகள் கொள்முதல் செய்த காய்கறிகளின் அளவு, விற்பனை செய்தது, நிர்ணயிக்கப்பட்ட விலை, வருமானவரி செலுத்திய விவரம் ஆகிய கணக்குகளை அவர்கள் சரி பார்த்தனர். இந்த சோதனையின் போது ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை.

திருச்சியில்...

திருச்சி காந்தி மார்கெட்டில் நேற்று சி.பி.ஐ. மற்றும் திருச்சி வருமான வரித்துறையினர் அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் காந்திசிலை அருகே உள்ள ஒரு மொத்த காய்கறி வியாபாரி கடையில் நேற்று காலை முதல் இரவு வரை அதிரடி சோதனை நடத்தினர். இதில் காய்கறிகள் கொள்முதல் மற்றும் விற்பனை அளவு, லாபம் பற்றி கேட்டறிந்தனர்.

சி.பி.ஐ. மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த திடீர் சோதனையால் காந்தி மார்க்கெட்டில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பல மொத்த வியாபாரிகள் கலக்கம் அடைந்தனர்.

காய்கறி மொத்த வியாபாரிகளிடம் நடத்தப்பட்ட இந்த திடீர் சோதனை, வியாபாரிகள் மத்தியில் ஒரு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எந்த நேரத்தில், யாருடைய கடையில், யாருடைய வீட்டில் சோதனைகள் நடக்குமோ? என்ற அச்சத்தில் உள்ளனர் காய்கறி வியாபாரிகள். இந்த சோதனைகளின் எதிரொலியாக, விரைவில் காய்கறி விலை மேலும் சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
The CBI and IT officials made surprise raids in whole sale vegetable vendors all over the state. Reports of raids on hoarders and black marketeers in the state including Chennai has sent a positive signal to retailers, another trader observed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X