For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லே பகுதிக்குள் ஊடுறுவி இந்திய பணியாளர்களை எச்சரித்த சீன ராணுவம்

Google Oneindia Tamil News

லே: இந்தியாவுக்குள் ஊடுறுவி, அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த இந்தியப் பணியாளர்களுக்கு சீன ராணுவம் எச்சரிக்கை விடுத்த தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்தியாவின் பாதுகாப்பு மிக மோசமான நிலையில் உள்ளதை இது நிரூபிப்பதாக உள்ளது.

காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பிராந்தியத்தில், இந்திய எல்லைப் பகுதிக்குள் அடிக்கடி சீன ராணுவம் ஊடுறுவி வருகிறது. இதைத் தடுக்க இதுவரை இந்தியா தீவிர முயற்சிகள் எதையும் எடுத்தது போலத் தெரியவில்லை. இதுதொடர்பாக சீனத் தரப்புடன் பேச்சுவார்த்தைகளை மட்டுமே நடத்தி வருகிறோம்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர்-அக்டோபர் மாத காலகட்டத்தில் லடாக் பிராந்தியத்தில், லே மாவட்டத் தலைநகரிலிருந்து 300 கிலோமீட்டர் தொலைவில் சீன எல்லையையொட்டியுள்ள ஒரு கிராமத்திற்குள் சீன ராணுவத்தினர் மோட்டார் சைக்கிள்களில் நுழைந்துள்ளனர்.

பின்னர் அங்கு ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடந்து வந்த பயணிகளுக்கான நிழற்குடை அமைக்கும் பணிகளைப் பார்வையிட்டுள்ளனர். பின்னர் அந்தப் பணியில் ஈடுபட்டிருந்த கான்டிராக்டரை அழைத்து, இந்தப் பணியை தொடரக் கூடாது, நிறுத்த வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். பின்னர் அங்கிருந்து போய் விட்டனராம்.

English summary
After remaining peaceful for most of the year, Chinese troops entered Indian territory in the fag end of 2010 along the Line of Actual Control in South-eastern Ladakh region and threatened a contractor and his team to halt work on constructing a "passenger shed". The Chinese troops, which included motor-cycle borne personnel of People's Liberation Army (PLA), entered Gombir area in Demchok region in Jammu and Kashmir and threatened the civilian workers who were building the shed, the plan for which was cleared by the state rural development department. The incident took place in September-October last year in a village about 300-kms south-east of Leh district headquarters.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X