For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

6 நாள் வீழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி... சென்செக்ஸில் 338 புள்ளிகள் உயர்வு!

By Chakra
Google Oneindia Tamil News

மும்பை: வங்கித்துறை மற்றும் உற்பத்தித் துறைப் பங்குகள் கணிசமான விலையேற்றம் கண்டதால் இன்று சென்செக்ஸில் 338 புள்ளிகள் உயர்ந்தது.

மும்பை பங்கு சந்தை குறியீட்டெண் இன்று அதிகபட்சமாக 19574.63 வரையிலும், குறைந்த பட்சமாக 19048.56 புள்ளிகளாகவும் இருந்தது. சுஸ்லான், ஐசிஐசிஐ உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகள் பெருமளவு உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதன் மூலம் தொடர்ந்து 6 நாட்களாக நீடித்த வீழ்ச்சிக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

தேசிய பங்கு சந்தை குறியீட்டெண் அதிகபட்சம் 5874.20 புள்ளிகளாகவும், குறைந்த பட்சம் 5711.30 புள்ளிகளாகவும் இருந்தது.

இன்றைய வர்த்தகத்தில் சுஸ்லான் எனர்ஜி (12.53%), ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் (7.37%), டாடாமோட்டார்ஸ் (5.52%),ஐசிஐசிஐ வங்கி (4.52%), மற்றும் ரிலையன்ஸ் கேபிடல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து கைமாறின.

பஜாஜ் ஆட்டோ(-1.68%), ஹெச்யூஎல் (-1.09%), எல்அண்டு டி (-0.98%), டாடா பவர் (-0.79%) மற்றும் மாருதி (-0.31%) உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்தன.

வர்த்தக நேர முடிவில் சென்டசெக்ஸ் 337.76 புள்ளிகள் உயர்ந்து 19534.10-ல் நிறைவு பெற்றது. நிப்டி109.15 புள்ளிகள் உயர்ந்து 5754.10 -ல் நிலைப் பெற்றது.

English summary
Snapping its 6-day falling streak, longest in a year, the BSE benchmark Sensex today shot up 338 points as investors bought fundamentally strong stocks, available at lower levels, amid firming global markets.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X