For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் 5 நாள் பைபிள் கண்காட்சி இன்று துவங்கியது

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் இன்று காலை பைபிள் கண்காட்சி துவங்கியது. இது வரும் 16-ம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் நடக்கும்.

இந்திய வேதாகமச் சங்கம், புக் ரூம் ஆகியவை இணைந்து சென்னையில் பைபிள் கண்காட்சி நடத்துகின்றன. இந்த கண்காட்சி சென்னை கெல்லீஸ் கார்னரில் உள்ள பிஷப் மாணிக்கம் அரங்கில் இன்று துவங்கியது.

இந்த பைபிள் கண்காட்சி மற்றும் தள்ளுபடி விற்பனையில் உலகிலேயே மிகச்சிறிய 2-வது பைபிள், மிகப்பெரிய பைபிள், ஆய்வு பைபிள்கள், தமிழ், ஆங்கிலம், இந்தி மொழியில் பைபிள்கள், பல்வேறு கிறிஸ்துவ புத்தகங்கள், சிறிய குழந்தைகள் பைபிளை படிக்கும் வகையில் பட விளக்கங்களுடன் கூடிய பைபிள்கள், கண்பார்வையற்றவர்கள் படிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட பிரெய்லி முறை பைபிள்கள், எழுத, படிக்கத் தெரியாதவர்கள் பைபிளை படிப்பதற்கு வசதியாக சோலார் பேட்டரி பைபிள்கள், டிஜிட்டல் பைபிள் உள்ளிட்டவை லைக்கப்பட்டுள்ளன.

சோலார் பேட்டரி பைபிளில் ஒரு பட்டனை அழுத்தினால் அதில் பதிவு செய்யப்பட்டிருக்கும் வசனங்கள் ஒலிக்கும்.

டிஜிட்டல் பைபிளில் 1,280 பக்கங்கள் கொண்ட பைபிளின் அனைத்து அதிகாரமும் கைக்கடங்கும் சிறிய கருவியில் அடக்கப்பட்டுள்ளது.

இந்த பைபிள் கண்காட்சியை ஈ.சி.ஐ. சென்னை பேராயர் சுந்தர்சிங் இன்று காலை 9.30 மணிக்கு துவங்கி வைத்தார்.

இது வரும் 16-ம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது. இந்த தகவலை இந்திய வேதாகம சங்கத்தின் மார்க்கெட்டிங் இயக்குனர் டபிள்யூ.ஆர்.பால்ராஜ், சென்னை துணை செயலர் பாதிரியார் டி.எஸ்.எபி சாமுவேல் ஆகியோர் தெரிவித்தனர்.

English summary
5 day bible exhibition kicks off today in Chennai. Several types of bibles including digital bible, solar battery bible, brailey bible, world's second smallest bible, etc. are kept in the exhibition. People can see the exhibition between 10 am and 8 pm.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X