For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எல்கேஜி படிப்பில் சேர்க்க நுழைவுத் தேர்வு நடத்தினால் கடும் நடவடிக்கை-அரசு

Google Oneindia Tamil News

சென்னை: எல்கேஜி படிப்பில் சேர்க்க நுழைவுத் தேர்வு நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நர்சரிப் பள்ளிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐஏஎஸ் கூட எளிதாக படித்து விட முடியும். ஆனால் எல்கேஜியில் அட்மிஷன் வாங்குவது மிகப் பெரிய மலையைப் பிளக்கும் காரியமாகியுள்ளது. விடிய விடிய பள்ளிகளின் முன்பு வரிசையில் காத்திருந்து, விண்ணப்ப பாரம் வாங்கி, அதைக் கொடுத்து, பள்ளிகள் நடத்தும் நேர்முகத்தேர்வில் அப்பா, அம்மாக்கள் கலந்து கொண்டு சரியாக பதிலளித்து, பிள்ளைகள் நுழைவுத் தேர்வு எழுதி பாஸ் செய்தால்தான் அட்மிஷன் கொடுக்கின்றன பல பள்ளிகள்.

இதில் பல பள்ளிகள், அப்பா, அம்மாவுக்கு ஆங்கிலம் தெரியாவிட்டால் அல்லது பட்டப் படிப்பு படித்திருக்காவிட்டால் அட்மிஷனே தருவதில்லை.

இந்தக் காலக் கொடுமைக்கு முடிவு கட்டும் வகையில், 6 வயது முதல் 14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக்கல்வியை சட்டம் மூலம் கொண்டு வந்துள்ளது அரசு. மத்திய அரசின் இந்தத் திட்டத்தை அனைத்து மாநில அரசுகளும் முறையாக அமல்படுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் 8ம் வகுப்பு வரை யாரையும் பெயிலாக்கக் கூடாது என்றும் சட்டம் கூறுகிறது.

இருப்பினும் எல்.கே.ஜிக்கு நுழைவுத் தேர்வு நடத்தும் கொடுமை இன்னும் பல நர்சரிப் பள்ளிகளில் நடந்து கொண்டுதான் உள்ளது. ஆனால் இதை நடத்தக் கூடாது என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்,

ஜுலை 1-ந்தேதி 3 வயது நிரம்பிய குழந்தைகள் எல்.கே.ஜி.யில் சேர தகுதி உடையவர்கள். அவர்களை எல்.கே.ஜி.யில் சேர்க்க எந்த நுழைவுத்தேர்வும் நடத்தக்கூடாது. அவர்களின் பெற்றோர் படித்திருக்கிறார்களா என்று கேட்கக்கூடாது. விண்ணப்ப கட்டணம் ரூ.50க்கு மேல் இருக்கக்கூடாது.

மாணவர் சேர்க்கைக்காக நன்கொடை வசூலிக்கக்கூடாது. பள்ளிக்கூடங்களில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்கு புகையிலைபொருட்கள் விற்கக்கூடாது. புகை பிடிக்கவும் கூடாது. பள்ளிகளை சுகாதாரமாக வைத்துக்கொள்ளவேண்டும்.

மாணவர்கள் நுழைவுத்தேர்வு நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களை ஆசிரியர்கள் வேலை ஏவக்கூடாது. அடிக்கக்கூடாது. நான் இங்கு கூறியவற்றை ஏற்கனவே பல முறை பள்ளிகளுக்கு கல்வி அதிகாரிகள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றனர்.

English summary
TN govt has warned Nursery schools not to conduct entrance test for LKG admission. Many schools are conducting entrance test for LKG admission despite govt's severe warning. But this time violators will be punished severely, education dept has warned.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X