For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்காவில் ஒபாமா செல்வாக்கு அதிகரிப்பு: 50 சதவிகிதம் பேர் ஆதரவு

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் தற்போது அதிபர் ஒபாமாவின் செல்வாக்கு மீண்டும் அதிகரித்திருப்பது கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.

ஒபாமா அமெரிக்க அதிபராக பதவி ஏற்றபோது அமெரிக்க பொருளாதாரம் சரிவில் இருந்தது. அப்போது மக்கள் ஒபாமா நிச்சயம் பொருளாதாரத்தை சரிவில் இருந்து மீட்பார் என்று நம்பினார்கள். ஆனால் மகக்ளின் நம்பிக்கையை அவரால் முழுவதும் காப்பாற்ற முடியவில்லை. அதனால் அமெரிக்கர்களிடையே ஒபாமாவின் செல்வாக்கு குறைந்தது.

தற்போது அவர் பொருளாதாரத்தை சரிவில் இருந்து ஓரளவு மீட்டு சரியான பாதையில் கொணடு செல்கிறார். இதனால் அவருக்கு செல்வாக்கு அதிகரி்த்துள்ளது. கடந்த டிசம்பரில் நடத்தப்பட்ட ஆய்வில் ஒபாமாவுக்கு 45 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

ஆனால் தற்போது நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் அவருக்கு 50 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஒபாமா பொருளாதாரத்தை சரியான பாதையில் கொண்டு செல்வதாக 36 சதவிகிதம் பேர் கூறியுள்ளனர்.

English summary
US prez Obama's influence on America increases according to a study. 50% Americans have supported Obama and 36% believe that US economy is going on in the right path.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X