For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நான் ஜெயலலிதாவை ஆதரிக்கவில்லை-சீமான் திடீர் விளக்கம்

Google Oneindia Tamil News

Seeman
திருச்சி: ஈழத்தில் தமிழ் இனத்தை அழித்தவர்களுக்கு துணை போனவர் கருணாநிதி. எனவே அவரது ஆட்சி மீண்டும் வரக் கூடாது என்று தான் சொன்னேன். ஆனால் ஜெயலலிதாவை ஆதரிப்பதாக நான் கூறவே இல்லை என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பாபர் மசூதியின் தீர்ப்பும், தேசிய அவமானமும் என்ற தலைப்பில் திருச்சியில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்த கருத்தரங்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது,

ஈழத்தில் உள்ள தமிழ் இனத்தை அழித்தவர் கருணாநிதி. எனவே அவர் மீண்டும் தமிழகத்தில் ஆட்சிக்கு வரக்கூடாது என்று தான் நான் சொன்னேன்.

அதற்காக நான் ஜெயலலிதாவை ஆதரிக்கிறேன் என்று அர்த்தமா? நான் ஆதரிக்கிறேன் என்று எந்த இடத்திலும் சொல்லவில்லையே?

கருணாநிதி ஊழல் செய்தார் என்று ஜெயலலிதா சொல்கிறார். ஜெயலலிதா ஊழல் செய்தார் என்று கருணாநிதி சொல்கிறார். நீங்கள் இரண்டு பேரும் ஊழல் செய்தவர்கள் என்று நாங்கள் சொல்கிறோம். இந்த நாட்டுக்குத் தேவையில்லை என்று நாங்கள் கூறுகிறோம்.

ஜெயலலிதா, கருணாநிதியை விட்டால் நாட்டைக் காக்க வேறு ஆளே இல்லையா? நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் புதிய அரசியல் மாற்றத்தைக் கொண்டுவர முடியும்.

தமிழினத்தை அழித்த காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் அழிக்க வேண்டும். எந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்தாலும், எவ்வளவு சீட் வாங்கினாலும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியையும் அதன் கூட்டணியையும் தோற்கடிப்போம் என்றார்.

English summary
Naam Tamilar leader Seeman said that he has never told that he is supporting Jeyalalitha. He does not want Karunanidhi to came back to power.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X