For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எண்ணெய் வளம்: சவுதி அரேபியாவை முந்திய வெனிசூலா

Google Oneindia Tamil News

காரகஸ்: கச்சா எண்ணெய் வளத்தில் சவுதி அரேபியாவை வெனிசூலா மிஞ்சிவிட்டதாக அந்நாட்டு எண்ணெய் வளத் துறை அமைச்சர் ரபேல் ராமிரெஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

கடந்த 2010-ம் ஆண்டின் இறுதியில் வெனிசூலாவில் 217 பில்லியன் பேரல்கள் எண்ணெய் இருந்தது. தற்போது இந்த ஆண்டு துவக்கத்தில் 297 பில்லியன் பேரல்கள் எண்ணெயாக அது உயர்ந்துள்ளது என்றார்.

ஓபிஇசி எனப்படும் எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ள வெனிசூலா, லத்தீன் அமெரிக்கா எனப்படும் தென் அமெரிக்காவிலேயே மிகப் பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடாகும்.

வெனிசூலாவில் அன்மை காலமாக எண்ணெய் வளம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு ஆண்டிற்கு முன் எண்ணெய் வளம் சுமார் 2 முதல் 3 சதவிகிதம் அதிகரித்துள்ளது. வெனிசூலாவின் ஆரின்கோ பகுதியில் ஹெவி மற்றும் எக்ஸ்ட்ரா ஹெவி ஆயில் இருப்பு தான் இதற்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது..

English summary
Venezuela has overtaken Saudi Arabia in oil reserves with 297 billion barrels. It is the Latin America's leading exporter of crude oil. Oil minister Rafael Ramirez told that at the beginning of this year Venezuela has 297 billion barrels of oil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X