For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வடமேற்கு பாகிஸ்தானில் பெண்கள் பள்ளியை தகர்த்த தாலிபான்கள்: ஒரு ஆண்டில் 6 பள்ளிகள் தகர்ப்பு

Google Oneindia Tamil News

பெஷாவர்: வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள கைபர் ஆதிவாசி பகுதியில் உள்ள அரசுப் பெண்கள் பள்ளியை தாலிபான்கள் இன்று குண்டு வைத்து தகர்த்தனர். ஆனால் இந்த சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்பட்டதாகத் தகவல் கிடைக்கவில்லை.

இது குறித்து அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது,

கைபர் பகுதியில் கோககேல் கிராமத்தில் உள்ள ஆரம்ப பள்ளி காலியாக இருந்தபோது தான் தாலிபான்கள் குண்டு வைத்துள்ளனர். பின்னர் அக்குண்டை ரிமோட் கன்ட்ரோல் மூலம் வெடிக்கச் செய்தனர். இதில் பள்ளிக் கட்டிடம் பெரும் சேதம் அடைந்தது என்றார்.

கடந்த ஆண்டில் மட்டும் ஆப்கான் எல்லை அருகில் உள்ள கைபர் பகுதியில் மொத்தம் 6 பள்ளிகளும், 2 ஆரம்ப சுகாதார மையங்களும் தாலிபான்களால் தகர்க்கப்பட்டன. அவர்கள் பெண் கல்விக்கு எதிராகத் தான் இவ்வாறு செய்து வருகின்றனர்.

English summary
Taliban militants who are against girls' education blew up a primary school in lawless Khyber tribal region. They have blown up 6 schools and 2 healthcare facilities last year in this area.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X