For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்பெக்ட்ரம் ஊழல்: ராசா, 2 அதிகாரிகள் கைது-சிபிஐ அதிரடி,அதிர்ச்சியில் திமுக!

By Chakra
Google Oneindia Tamil News

Raja
டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஊழல் விவகாரம் தொடர்பாக முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவை சிபிஐ இன்று கைது செய்தது.

ராசாவுடன் முன்னாள் தொலைத் தொடர்புத்துறைச் செயலாளர் சித்தார்த் பெகுரியா, ராசாவின் முன்னாள் தனிச் செயலாளர் சந்தோலியா ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராசா மீது சட்டவிரோத கிரிமினல் செயல்பாடு, தொலைத் தொடர்புத்துறை கொள்கைகளை மீறி சில நிறுவனங்களுக்கு சலுகை வழங்கியது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குகள் தாக்கல் செய்துள்ளது சிபிஐ.

ஐபிசி 120B, 13(2), 13(1D) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் தாக்கலாகியுள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக ஆ.ராசா, நீரா ராடியா, தொலை தொடர்பு துறை முன்னாள் அதிகாரிகள் உள்பட பலரிடமும் சிபிஐ தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்தப் புகாரையடுத்து நவம்பர் 14ம் தேதி ராசா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து ராசாவிடம் கடந்த டிசம்பர் மாதம் 24ம் தேதி முதன் முதலில் சிபிஐ விசாரணை நடத்தியது. அப்போது அவரது உறவினர்களிடமும் நண்பரிடமும் விசாரணை நடந்தது. அதற்கு முன் 8ம் தேதி அவரது வீட்டிலும் அவரது உறவினர்களின் வீட்டிலும் என மொத்தம் 14 இடங்களில் ரெய்ட் நடத்தியது.

25ம் தேதி 2வது முறையாக ராசாவிடம் விசாரணை நடத்தினர். இந் நிலையில் நிலையில் நேற்று முன்தினம் டெல்லியில் திமுக தலைவர் கருணாநிதியும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் சட்டமன்றத் தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு நடத்திக் கொண்டிருந்தபோதே ராசாவிடம் சிபிஐ மீண்டும் விசாரணை நடத்தியது. சுமார் 7 மணி நேரம் தொடர்ந்து இந்த விசாரணை நடந்தது.

சகோதரரிடமும் விசாரணை:

அதே நேரத்தில் ராசாவின் சகோதரர் கலிய பெருமாளிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந் நிலையில் இன்று காலை முதல் ராசாவிடம் மீண்டும் சிபிஐ அதிகாரிகள் 4வது முறையாக விசாரணை நடத்தினர். டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் வைத்து இந்த விசாரணை நடந்தது.

இன்றைய விசாரணையைத் தொடர்ந்து சிபிஐ இன்று முக்கிய முடிவு எடுக்க இருப்பதாக உள்ளதாக நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

அதே போல இன்று பிற்பகலில் ராசாவை கைது செய்தது சிபிஐ.

அவர்களுடன் முன்னாள் தொலைத் தொடர்புத்துறைச் செயலாளர் பெகுரியா, ராசாவின் முன்னாள் தனிச் செயலாளர் சந்தோலியா ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் ராசாவின் மருத்துவர் சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு விரைந்துள்ளார். இதற்கான காரணம் தெரியவில்லை. ராசா இன்று இரவு சிபிஐ அலுவலகத்தில் வைக்கப்பட்டு நாளை காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்.

ஸ்பெக்ட்ரம் தொடர்பான விசாரணை அறிக்கையை சிபிஐ வரும் 10ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தனது தாக்கல் செய்ய வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு முறைகேடுகளால் நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மத்திய தலைமை தணிக்கைத்துறை குற்றம் சாட்டியுள்ளது.

ஆனால், ரூ. 22,000 கோடியளவுக்கே நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சிபிஐ தனது முதல் தகவல் அறிக்கையில் (FIR) கூறியுள்ளது.

அதே நேரத்தில் தமிழக சட்டமன்றத் தேர்தல் தொகுதிப் பங்கீட்டில் திமுகவை நெருக்கவே இந்த நேரத்தில் சிபிஐ தனது பிடியை இறுக்குவதாகவும் பேச்சுக்கதள் எழுந்துள்ளன. இந்தக் கைது நடவடிக்கையால் திமுக அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

அதிமுக கொண்டாட்டம்:

இந் நிலையில் ராசா கைது செய்யப்பட்டதை அதிமுகவினர் .பட்டாசு வெடித்து கொண்டாடினர். திருநெல்வேலி மற்றும் நீலகிரியில் அதிமுகவினர் பட்டாசுகளை வெடித்தனர்.

திமுக எம்எல்ஏ சாலைமறியல், வன்முறை:

ராசா கைது செய்யப்பட்டதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் பெரம்பலூரில் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

ராசாவின் சொந்த ஊரான பெரம்பலூரில் ஆண்டிமடம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. சிவசங்கர், அரியலூர் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் எம்.எல்ஏவுமான துரைசாமி மற்றும் திமுகவினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பஸ்கள் கல்வீசித் தாக்கப்பட்டன. இதைத் தடுக்க வந்த போலீஸார் மீது கல்வீச்சு நடந்தது.

இதையடுத்து பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் டயர்களைப் போட்டு எரித்து சாலை மறியலிலும் ஈடுபட்ட திமுகவினரால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

English summary
The CBI on Wednesday arrested former telecom minister A Raja in the 2G Spectrum case along with former telecom secretary Siddharth Behuria and Raja's personal secretary RK Chandolia. Raja has been charged with criminal misconduct, violation of policies and favouring some specific companies during the granting of 2G spectrum licences. Ahead of the 2G case coming up for hearing in the Supreme Court next week, Raja was quizzed by investigating agency for the fourth time on Wednesday at the CBI headquarters in Delhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X