For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெல்லியில் பூண்டு விலை கிடுகிடு உயர்வு: கிலோ ரூ. 300

Google Oneindia Tamil News

Garlic
டெல்லி: டெல்லி மக்களுக்கு இது சோதனை காலம் போலும். தற்போது தான் தலைநகரில் விண்ணைத் தொட்ட வெங்காயம் மற்றும் தக்காளி விலை குறைந்துள்ளதே என்று மக்கள் நிம்மதி பெருமூச்சுவிட, பூண்டு விலை ஒரேயடியாக ஒரு கிலோ ரூ. 300-க உயர்ந்துள்ளது.

டெல்லியில் ஆரம்பத்தில் வெங்காயம், பின்னர் தக்காளி, அடுத்து வாழைப்பழ விலை கடுமையாக உயர்ந்தது. தற்போது பூண்டு விலையும் உயர்ந்துள்ளது.

இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது,

கடந்த் ஒன்றரை மாதங்களாக டெல்லியில் சில்லறை வியாபாரத்தில் பூண்டு கிலோ ரூ. 250 முதல் 300 வரை விற்கப்படுகிறது.

இன்னும் இரண்டு வாரத்தில் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மஹாராஸ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து பூண்டு வரத் துவங்கும். அதனால் மக்கள் பொறுத்திருக்க வேண்டியதைத் தவிர வேறு வழி இல்லை என்றனர்.

வரும் 15-ம் தேதிக்குப் பிறகு டெல்லி மார்க்கெட்டுக்கு புதிய பூண்டு வரத் துவங்கும் என்று ஆசாத்பூர் மார்க்கெட் பூண்டு வியாபாரிகள் சங்கத்தின் துணை தலைவர் ஜிதேந்திரா குராணா பிடிஐக்கு தெரிவித்தார்.

English summary
Garlic price in Delhi is all time high. One kg garlic costs Rs. 300. Since the new garlic crop will come after 2 weeks, Delhiites are left with no option other than patience.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X