For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வடசென்னை அதிமுக நிர்வாகிகள் மாற்றம் : ஜெயலலிதா அறிவிப்பு

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: வடசென்னை அதிமுக நிர்வாகிகள் திடீர் என்று மாற்றப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

வட சென்னை மாவட்ட அதிமுக செயலாளராக கிட்டத்தட்ட 10 வருடம் இருந்தவர் சேகர்பாபு. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக 2 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். திடீர் என்று கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அவர் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். இதையடுத்து தற்போது நிர்வாகிகள் மாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அவர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

வடசென்னை மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராக இருக்கும் வெங்கடேஷ்பாபு, மாணவர் அணி செயலாளர் சாக்ரடீஸ், வக்கீல் பிரிவு இணை செயலாளர் பிரதாப் குமார், துறைமுகம் பகுதி செயலாளர் கு.சீனிவாசன் எம்.எல்.ஏ. ஆகியோர் அவர்கள் பொறுப்புகளில் இருந்து இன்று முதல் விடுவிக்கப்படுகின்றனர்.

மேலும், எழும்பூர் பகுதி துணை செயலாளர் துரைராஜ், 106-வது வட்ட துணை செயலாளர் ரஞ்சித், பெரம்பூர் பகுதி ஜெயலலிதா பேரவை செயலாளர் இளைய கிருஷ்ணன், வில்லிவாக்கம் பகுதி மாணவர் அணி இணை செயலாளர் அப்பாஸ் ஆகியோரும் அவரவர் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டு்ள்ளார்கள்.

வடசென்னையின் புதிய நிர்வாகிகள் விபரம் வருமாறு:

ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர்- இளையகிருஷ்ணன்

மகளிர் அணி மாவட்ட செயலாளர்- சாந்தி

மாணவர் அணி மாவட்ட செயலாளர்- அப்பாஸ்

துறைமுகம் பகுதி செயலாளர் - பிரதாப் குமார்

ராயபுரம் பகுதி மகளிர் அணி செயலாளர் - நாகம்மாள்

100-வது வட்ட செயலாளர் துரைராஜ்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

English summary
ADMK chief Jeyalalitha has announced that north Chennai ADMK functionaries have been changed. She has retained some of the existing people and appointed some new functionaries.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X