For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சனிக்கிழமைகளில் எழும்பூர்-நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்: நாளை முன்பதிவு துவக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: பயணிகள் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காகவும் சென்னை எழும்பூர்-நாகர்கோவிலுக்கு இடையே சனிக்கிழமைகள் தோறும் அதிவேக சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்கவிருக்கிறது.

இந்த சிறப்பு ரயில் சேவை வரும் 12-ம் தேதி துவங்குகிறது.

மார்ச் மாதம் 26-ம் தேதி வரை சனிக்கிழமை தோறும் சிறப்பு ரயில்(எண் 06303) சென்னை எழும்பூரில் இருந்து மாலை 6.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

அதேபோன்று மறுமார்க்கத்தில் வரும் 13-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் அடுத்த மாதம் 27-ம் தேதி வரை ஞாயிறுதோறும் மாலை 5 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரயில் (எண்06304) இயக்கப்படும்.

இந்த அதிவேக சிற்பபு ரயிலுக்கான முன்பதிவு நாளை(ஞாயிற்றுக்கிழமை) துவங்குகிறது.

வரும் 7-ம் தேதி இரவு 10.30 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படவேண்டிய சென்னை எழும்பூர் -கவுகாத்தி வாராந்திர எக்ஸ்பிரஸ் மறுநாள் 8-ம் தேதி நள்ளிரவு 12.05 மணிக்கு புறப்பட்டும்.

வரும் 10-ந் தேதி இரவு 10.30 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படவேண்டிய சென்னை எழும்பூர்-திப்ருகார் வாராந்திர எக்ஸ்பிரஸ் அடுத்த நாள் நள்ளிரவு 12.05 மணிக்கு புறப்பட்டும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

English summary
Southern railway provides superfast special train from Chennai Egmore -Nagercoil on saturdays. Advance booking for this special train begins tomorrow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X