For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கசாப்புக்கு மரண தண்டனை உறுதியாகுமா?-தீர்ப்பு தேதி நாளை அறிவிப்பு

Google Oneindia Tamil News

Kasab
மும்பை: மும்பை தீவிரவாத தாக்குதல் குற்றவாளியான பாகிஸ்தானின் அஜ்மல் கசாப்புக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதிப்படுத்தும் வழக்கில் தீர்ப்பு அறிவிக்கும் தேதி நாளை தெரிவிக்கப்படும் என பாம்பே உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மும்பை தனி நீதிமன்றத்தில் கசாப்புக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதை பாம்பே உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்த வேண்டும். இதுதொடர்பான வழக்கு பாம்பே உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்து. ஜனவரி 7ம் தேதி இந்த வழக்கின் விவாதங்கள், நீதிபதிகள் ரஞ்சனா தேசாய், ஆர்.வி. மோரே அடங்கிய பெஞ்ச் முன்பு முடிவடைந்தது. இதையடுத்து அடுத்த முடிவு பிப்ரவரி 7ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் நாளை இந்த வழக்கு மீண்டும் வருகிறது. அப்போது தீர்ப்பு அறிவிக்கப்படும் தேதியை நீதிபதிகள் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தனது தண்டனையை எதிர்த்து கசாப் தொடர்ந்துள்ள மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பையும் நீதிபதிகள் கூடவே அறிவிப்பார்கள். மேலும், இந்த வழக்கிலிருந்து பஹீம் அன்சாரி, சபாபுதீன் அகமது ஆகியோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மகாராஷ்டிர அரசு தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பும் சேர்த்து அறிவிக்கப்படவுள்ளது.

English summary
The case relating to confirmation of death sentence awarded to Pakistani terrorist Ajmal Kasab for his role in 26/11 terror attacks is in its final stages with the Bombay High Court likely to fix tomorrow the date for delivering the verdict. On January 7, arguments concluded in the case following which Justices Ranjana Desai and R V More reserved order and kept the matter for directions on February 7. Along with the verdict on confirmation of death penalty, the Hight Court would also give judgement on an appeal filed by Kasab against his conviction and also on the appeal filed by Maharashtra Government against acquittal of co-accused Faheem Ansari and Sabauddin Ahmed in the same case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X