For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காட்பாடியில் சிலிண்டர் வெடித்து வீடு இடிந்ததி்ல் 4 பேர் பலி : மக்கள் பீதி

By Siva
Google Oneindia Tamil News

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே இன்று அதிகாலையில் சிலிண்டர் வெடித்ததில் வீடு இடிந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி 4 பேர் பரிதாபமாக பலியாகினர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள காந்திநகர் ஜான்ஸ் காலனியைச் சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி (60). பெயிண்டர். அவரது மனைவி மகேஸ்வரி (55). அவர்களுக்கு பூபாலன், பாஸ்கரன் என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் பூபாலனுக்கு சங்கீதா என்ற மனைவியும் மற்றும் கவிதா, சிவானி (6 மாத் குழந்தை) என்ற 2 மகள்களும் உள்ளனர்.

புண்ணியமூர்த்தி கூட்டுக் குடும்பமாக ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். வீட்டின் உரிமையாளர் கார்த்திகேயன், தன் மனைவி லாவண்யாவுடன் அடுத்த வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் புண்ணியமூர்த்தி இன்று அதிகாலை 5-45 மணிக்கு எழு்து காஸ் அடுப்பை பற்ற வைத்துள்ளார். ஏற்கனவே காஸ் கசிந்து இருந்ததால் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் வீடு இடிந்து விழுந்தது. வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.

இது குறித்து தகவல் கிடைத்தவுடன் போலீஸ் சூப்பிரண்டு அன்பு, டி.எஸ்.பி.க்கள் சீதா ராமன், ராதாகிருஷ்ணன் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இடுபாடுகளில் சிக்கிய சங்கீதா பரிதாபமாக உயிர் இழந்தார். அவரது உடல் மீட்கப்பட்டது.

இதையடுத்து குழந்தை சிவானி, பாஸ்கரன், கார்த்திகேயன், லாவண்யா ஆகியோர் உயிருடன் மீட்கப்பட்டனர். புண்ணியமூர்த்தி, மகேஸ்வரி, கவிதா, பூபாலன் ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தனர். இதில் பூபாலன் 3 மணி நேர போராட்டத்துக்குப்பின் மீட்கப்பட்டார்.

இடுபாடுகளில் சிக்கிய 2 பேரும் பலியானார்கள். இவர்களையும் சேர்த்து பலியானோர் எண்ணிக்கை 3க உயர்ந்தது.

அதிகாலையில் பயங்கர சத்தம் கேட்டதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் இடுபாடுகளில் சிக்கி புண்ணியமூர்த்தி, சிறுமி கவிதா, மகேஸ்வரி ஆகியோர் உயிர் இழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.

அதிகாலையிலேயே பயங்கர சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர். அனைவரும் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து பார்த்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 2 கிமீ தூரம் வரை சிலிண்டர் வெடித்த சத்தம் கேட்டதாக மக்கள் தெரிவித்தனர்.

2 ஜே.சி.பி. எந்திரம், கிரேன் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகளுடன் அப்பகுதி மக்களும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

English summary
A gas cylinder blasted in the early morning today near Katpadi in which the house collapsed. The joint family which lived in that house were caught under the debris. Three people died in this incident while others rescued.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X