For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பி.எஸ்.என்.எல்லில் அரங்கேறிய 'வைமேக்ஸ்' ஊழல்...விசாரணைக்கு கபில் சிபல் உத்தரவு!

By Shankar
Google Oneindia Tamil News

BSNL
டெல்லி: 2 ஜி ஸ்பெக்ட்ரம், சேட்டிலைட் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கிய விவகாரத்தில் பல லட்சம் கோடி ஊழல் நடந்து நாடே பரபரத்துக் கிடக்கும் இந்த சூழலில், அதே தொலைத் தொடர்புத் துறையில் மேலும் ஒரு புதிய ஊழல் கிளம்பியுள்ளது.

மத்திய அரசின் டெலிபோன் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் நடந்துள்ள முறைகேடுதான் அது.

பி.எஸ்.என்.எல். நிறுவனம் வைமேக்ஸ் எனும் பிராட்பாண்ட் வயர்லெஸ் சேவையை பெருநகரங்களில் வழங்க தனியார் நிறுவனங்களை ஏஜெண்டுகளாக நியமித்தது. நாடு முழுவதும் 4 நிறுவனங்கள் ஏஜெண்டுகளாக நியமிக்கப்பட்டன.

அவை பிராட்பாண்ட் வயர்லெஸ் சேவையை வழங்குவதுடன் 50 ஆயிரம் பி.எஸ்.என்.எல். கோபுரம் மற்றும் 20 ஆயிரம் வளாகங்கள் அமைக்கும் பணியையும் சேர்த்து செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

இந்த நிறுவனங்களிடம் பி.எஸ்.என்.எல். நிறுவனம் நுழைவு கட்டணம் எதுவும் வாங்கவில்லை. மேலும் வருடாந்திர லாப பங்குகளையும் பெறவில்லை. அதே நேரத்தில் இந்த சேவை பணிக்காக பி.எஸ்.என்.எல். நிறுவனம் மத்திய அரசுக்கு ரூ.8 ஆயிரம் கோடி நுழைவு கட்டணமாக செலுத்தி உள்ளது.

அந்த கட்டணத்தை கூட ஏஜெண்டுகளிடம் இருந்து பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெறவில்லை. இந்த ஒதுக்கீடும் வெளிப்படையாகவோ அல்லது ஏலம் மூலமோ நடக்கவில்லை. ஒதுக்கீட்டை பெற்றதற்கு பிறகு அந்த நிறுவனங்கள் தங்கள் பங்குகளை அதிக தொகைக்கு விற்று பெரிய அளவில் லாபம் சம்பாதித்து உள்ளன.

எனவே இதில் முறைகேடு நடத்திருக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இதனால் இதுபற்றி விசாரணை நடத்தி அறிக்கை தரும்படி மத்திய தொலை தொடர்பு அமைச்சர் கபில்சிபல் தொலைத்தொடர்பு துறை செயலாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

ஸ்பெக்ட்ரம் விவகாரம் போல இந்த விவகாரமும் பெரிய அளவில் வெடிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

இந்த முறைகேடு நடந்த காலகட்டத்திலும் ஆ ராசாதான் துறையின் அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The 2G scam wasn't the only one to hit the telecom ministry during A Raja's tenure. Telecom minister Kapil Sibal on Monday ordered a thorough scrutiny of the process by which the public sector Bharat Sanchar Nigam Ltd (BSNL) had appointed franchisees for WiMAX services without charging any upfront entry fee and on a revenue share basis even though it (BSNL) had paid about Rs 8,000 crore as upfront entry fee to the government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X