For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யுனிடெக், ஸ்வான் நிறுவனங்களால் அரசுக்கு ரூ.7,105 கோடி நஷ்டம்: சிபிஐ

By Chakra
Google Oneindia Tamil News

Uninor
மும்பை: ஸ்வான் டெலிகாம், யுனிடெக் டெலிகாம் ஆகிய நிறுவனங்களால் நாட்டுக்கு ரூ. 7,105 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சிபிஐ தனது முதல் தகவல் அறி்க்கையில் தெரிவித்துள்ளது.

மொத்தத்தில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகளால் நாட்டுக்கு ஒட்டுமொத்தமாக ரூ. 22,000 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடுகளால் நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டதாக மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி (சிஏஜி) குத்துமதிப்பாக கூறியிருந்த நிலையில், இதை முழுமையாக விசாரித்த சிபிஐ ரூ. 22,000 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் உரிமையாளரான டி.பி.ரியாலிட்டி நிறுவனத்தின் அதிபர் உஸ்மான் பல்வாவை மும்பையில் கைது செய்த சிபிஐ, அவரை டெல்லிக்குக் கொண்டு செல்லும் முன் மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ரிமாண்ட் செய்தது. அப்போது மும்பை நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ள 5 பக்க முதல் தகவல் அறிக்கையில் (எப்ஐஆர்), தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகள் சிலர் மீதும், இதில் லாபம் அடைந்த தனியார் நிறுவனங்களின் அதிகாரிகள் மீதும் குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் சிபிஐ எப்ஐஆரில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் 22 வட்டங்களில் தொலைத் தொடர்பு சேவையைத் தொடங்குவதற்கு யுனிடெக் நிறுவனத்துக்கு ரூ. 1,658 கோடிக்கு ஸ்பெக்ட்ரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த நிறுவனம் தன் வசமிருந்த பங்குகளில் 60 சதவீதத்தை நார்வேயைச் சேர்ந்த டெலிநார் நிறுவனத்துக்கு ரூ. 6,100 கோடிக்கு விற்றது.

பின்னர் இந்த இரு நிறுவனங்களும் இணைந்து யூனிநார் என்ற பெயரில் செல்போன் சேவையைத் தொடங்கின.

அதேபோல ஸ்வான் நிறுவனத்துக்கு 13 வட்டங்களில் செலபோன் சேவை தொடங்க ரூ. 1,537 கோடிக்கு ஸ்பெக்ட்ரம் வழங்கப்பட்டது. இந்த நிறுவனம் இதில் 45 சதவீத பங்குகளை ஐக்கிய அரபு நாடுகளைச் சேர்ந்த எடில்சாட் நிறுவனத்திடம் ரூ. 4,200 கோடிக்கு விற்பனை செய்துவிட்டது.

இந்த இரு நிறுவனங்களும் இவ்வாறு மறைமுகமாக ரூ.7,105 கோடி லாபம் ஈட்டியுள்ளன. இந்த லாபம் மத்திய அரசுக்கு கிடைத்திருக்க வேண்டியதாகும்.

அதே போல பிற நிறுவனங்களுக்கும் 122 வட்டங்களில் செல்போன் சேவை தொடங்க லைசென்ஸ் ஒதுக்கப்பட்டதன் மூலம் மொத்தம் ரூ. 22,000 கோடி அளவுக்கு நாட்டுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

2001ம் ஆண்டு அப்போதைய மத்திய அரசு நிர்ணயித்த கட்டணத்தின் அடிப்படையிலும், அந்த அரசு நிர்ணயித்த முதலில் வருபவருக்கு முதலில் என்ற கொள்கையின் அடிப்படையிலும் லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

இதில் உள்நோக்கம் இருந்துள்ளது. இதற்கு தொலைத் தொடர்புத்துறை அதிகாரிகள் உடந்தையாக செயல்பட்டு தனியார் நிறுவனங்கள் லாபமடைய வழிவகுத்துள்ளனர் என்று எப்ஐஆரில் சிபிஐ கூறியுள்ளது.

English summary
Swan Telecom, Delhi-based real estate firm Unitech, and some other unknown companies together caused a loss of over Rs 22,000 crore to the Government of India, alleges the six-page FIR by the CBI in the 2G scam case. The FIR, which CBI presented to a Mumbai court today while seeking the transit remand of Balwa, the promoter and managing director of DB Realty, alleged that officials of the Department of Telecommunications (DoT) abused their position and entered into a criminal conspiracy with Swan and Unitech.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X