For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூ. 2 கோடி மோசடி-சிரஞ்சீவி மச்சான் மீது பெண் பரபரப்பு புகார்

By Siva
Google Oneindia Tamil News

ஹைதராபாத்: பிரஜா ராஜ்ஜியம் கட்சி உறுப்பினராக இருந்த நர்ரா ஜெயலட்சுமியிடம் எம்.பி. சீட் வாங்கித் தருவதாகக் கூறி அக்கட்சித் தலைவர் சிரஞ்சீவியின் மைத்துனன் அல்லு அரவிந்த ரூ. 2 கோடி வாங்கி ஏமாற்றிவிட்டதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.

தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த நர்ரா ஜெயலட்சுமி என்பவர் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் கட்சியில் உறுப்பினராக இருந்தார். அவர் தற்போது அல்லு அரவிந்த் மீது பரபரப்பு புகார் ஒன்றைக் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

கடந்த பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிட விரும்புவதாக அல்லு அரவிந்திடம் தெரிவித்தேன். உடனே அவர் சீட் வேண்டுமென்றால் ரூ. 2 கோடி தர வேண்டும் என்றார். நானும் என் உடைமைகளை எல்லாம் விற்று அந்த தொகையை அவரிடம் கொடுத்தேன். ஆனால் அவர் எனக்கு எம்.பி. சீட்டும் தரவில்லை, எனது பணத்தையும் திருப்பித் தரவில்லை. அவரை சந்திக்க அவர் வீட்டுக்கு சென்றால் காவலாளிகள் உள்ளே விட மறுக்கின்றனர்.

தேர்தல் முடிந்து இத்தனை மாதங்கள் கழித்தும் அவர் எனது பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை. அவர் எனது பணத்தை திரும்பத் தரவில்லை என்றால் நான் வரும் 15-ம் முதல் தேதி ஹைதராபாத் அம்பேத்கார் சிலை அருகே காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன் என்றார்.

ஆனால் இந்த விவகாரம் குறித்து அல்லு அரவிந்த மௌளம் சாதித்து வருகிறார்.

English summary
Telangana Democratic Front President Narra Jayalakshm told that Praja Rajyam chief Chiranjeevi's brother-in-law Allu Aravind has got Rs. 2 crore promising her a MP seat in the last election and cheated her. She threatens to go on indefinite hunger strike from february 15 if Allu Aravind does not return her money.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X